சென்னை
தனது அசத்திய நடிப்பால் தென்னிந்திய திரையுலகில் முக்கிய இடத்தில் இருப்பவர் ஃப்ளோரண்ட் பெரேரா. குணசித்திர நடிகரான இவர் தமிழ் மொழியில் உள்ள தொலைக்காட்சி சேனலில் (?) முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
003-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் சுமார் 11 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் தனது ஊடகவியல் வேலைகளில் கவனம் செலுத்தினார். மீண்டும் 2014-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான "கயல்" படத்தில் நடித்து திரைத்துறையினர் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். கயல் படமும் ஹிட் அடிக்க பெரேராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தொடரி, வேலையில்லா பட்டதாரி - 2, தரமணி, தர்மதுரை என அடுத்தடுத்து 12 படங்களில் நடித்தார். மேலும் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரேரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.ஃப்ளோரண்ட் பெரேரா மரணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.