tamilnadu

img

தபோல்கர் கொலை வழக்கு : அரபிக் கடலில் தேடப்படும் ஆயுதங்கள்!

மும்பை:
பகுத்தறிவா ளரான டாக்டர் நரேந்திர தபோல்கர், கடந்த 2013-ஆம்ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம்தேதி சுட்டுக் கொல்லப் பட்டார். இவ்வழக்கில் சரத் கலாஸ்கர் முதன்மைக் குற்றவாளி என்பதும், அவருக்கு வழக்கறிஞர் சஞ்சீவ் புனேலக்கர் உதவியதும் விசாரணையில் உறுதிப் படுத்தப்பட்டது. தபோல்கரைபடுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம்அரபிக்கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்பதால், அதனை தேடுவதற்கு மகாராஷ்டிர சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் சிபிஐ முன்வைத்து இருந்தது.இந்நிலையில், அரபிக் கடலில் தேடலை நடத்துவதற்கு, மகாராஷ்டிராவின் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை புனே நீதிமன்றத்தில், சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த தேடல் பணிக்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.