tamilnadu

img

பாஜக அரசு ரூ.1597 கோடி ஊழல்?

மும்பை:
பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்தில், மழை நீரை அகற்றும் திட்டத்தில் ரூ. 1597 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கடந்த 2005-ஆம் ஆண்டு மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்களைச் சந்தித்தது. குறிப்பாக மும்பை மோசமாக பாதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 1,094 பேர் மழை - வெள்ளத்திற்கு பலியாகினர். அப்போது முதல், மழைக்காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்றவும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செலவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், 2018 ஜூன் மாதம் முதல் 2019 ஜூன் மாதம் வரை, மழை வெள்ளப் பாதிப்புக்காக ரூ. 1597 கோடி செலவிடப்பட்டு உள்ளதாக மும்பை பெருநகர மாநகராட்சி அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மழை - வெள்ள நீரை அகற்றும் திட்டத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி மாபெரும் ஊழல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த முதல் 20 நிறுவனங்கள், சுமார் 60 சதவிகிதப் பணிகளை மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ. 938 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு நிறுவனத்தின் மூலம் (ஐடி 15621) மட்டும் ரூ.117 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.