india

img

கும்பமேளாவை தடுத்திருந்தால் நாடே இப்படி சுடுகாடாகி இருக்காது.... உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கும் சிவசேனா.....

மும்பை:
ஹரித்துவார் கும்பமேளா மற்றும்மேற்கு வங்கத் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தால், நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டிருப்பது நல்லது. எனினும் மேற்கு வங்கத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேரணி,பொதுக் கூட்டங்கள் மற்றும், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகியவற்றிலும் உச்சநீதிமன்றம் காலம் தாழ்த் தாமல் தலையிட்டிருக்க வேண்டும்.மேலும் ஹரித்துவார் கும்ப மேளாவுக்குச் சென்ற பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இந்த கும்பமேளாவை உச்சநீதிமன்றம் தடுத்திருக்கலாம். அவ்வாறுசெய்திருந்தால் இன்று மக்கள் இறக் கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். தில்லியில் ஆக்சிஜன் தட்டுப் பாட்டால் மக்கள் இறக்கின்றனர். தலைநகர் தில்லியிலேயே இத்தகைய நிலைஎன்றால் இதற்கு யார் பொறுப்பேற்பது? 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கொரோனாவின் இரண்டாவதுஅலையில் கவனம் செலுத்தியிருந் தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது. இன்று கொத்து கொத்தாக இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகிறது. இந்தியாவே சுடுகாடாகி விட்டது. இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.