மதுரை, டிச.28- தமிழகத்திலுள்ள சாலைகளை முழு மையாக தனியார் மயமாக்கி நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது என சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் அ.அம்சராஜ் கூறியுள்ளார். மதுரையில் சனிக்கிழமை செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழக அரசு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் சாலைகளை ஒருங்கிணைத்து மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து அதை தனியார் கையில் கொடுக்க உள்ளது. ஏற்கனவே, மாவட்ட முக்கிய சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை ஐந்தாண்டுகள் ஒரே கம்பெனி பராமரிக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, இராமநாத புரம், விருதுநகர், பழனி கோட்ட சாலைகளை (ஆயிரக்கணக்கான கோடிள் பெறுமானமுள்ள வை) தனியாருக்கு வாரி வழங்கியதோடு பராமரி ப்புப் பணிகளையும் தனியார் கம்பெனிக்கு வழங்கியுள்ளது. பல கோட்டங்களில் உள்ள சாலைகளை தனியார் கம்பெனியிடம் வழங்க வுள்ளது. இதர மாவட்டச் சாலைகளை (ODR) தனியார் கம்பெனி பராமரிக்க வழங்கிவருகிறது. இப்படி நெடுஞ்சாலைத்துறையில் தனியாரை ஊக்குவிப்பது நமது பணியையும் வாழ்வாதா ரத்தையும் பறிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக வேண்டும். பொதுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பணிகளை தனியாருக்கு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நீலகிரி கோட்டப்பொறி யாளர, கோயம்புத்தூர் நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோர் ஊழியர் விரோதப் போக்கை கைவிட வேண்டும், பழிவாங்கும் வகையில் போடப்பட்ட உத்தரவு களை திரும்பப்பெற வேண்டுமென்றார். மேலும் நெடுஞ்சாலைகளைப் பாதுகாப் போம், தேசத்தைப் பாதுகாப்போம் என வலி யுறுத்தி ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கமும் பங்கேற்கிறது என்றார். தொடர்ந்து நடைபெற்ற மாநிலச் செயற் குழுக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் ஆ.செல்வம், மதுரை மாவட்டச் செயலாளர் சோலையப்பன், மாநிலத்துணைத் தலைவர் பி.முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.