tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ கண்காட்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
புகைப்படக்கண்காட்சியினை திறந்து வைத்து ஆட்சியர் பேசும்போது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துறையூர், அந்தநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு, இத்திட்டத்தின் நோக்கம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என தெரிவித்தார். 
இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த  ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.  அதன் அடிப்படையில், இள நிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி  வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி யானது, கணினி பொறியியல் நிபுணத்துவம் புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும், மின்னணு  வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில்துறை இயந்திரவியல் மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ள வர்களாகவும் குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தகுதி யுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய  இடங்களில் தங்கும் வசதியுடன்  பயில வழிவகை செய்யப்பட்டு உள்ளது.  பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்,  மின்னனு உற்பத்தி நிறுவனம் ஆகிய தனியார் நிறுவனங்களில்  வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000/- ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ ஏற்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

கஞ்சா வழக்கில்  5 பேருக்கு 5 ஆண்டு சிறை

சட்டத்துக்குப் புறம்பாக 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை 5 ஆண்டு  சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் ரயிலடியில் 2023, அக்டோபர் 4 ஆம்  தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சாவை அப்போதைய மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி.சந்திரா கைப்பற்றினார். இது தொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசை (28), செல்வராமர் (40), சசிகுமார் (36), சென்னையைச் சேர்ந்த கார்த்தி (29), பிரபு (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட இன்றிய மையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி  ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து ஆசை, செல்வராமர், சசிகுமார், கார்த்தி, பிரபு ஆகியோருக்கு தலா 5  ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயி ரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.