tamilnadu

img

வாலிபர் சங்க மாநில மாநாடு ஓசூரில் வரவேற்புக் குழு அமைப்பு

வாலிபர் சங்க  மாநில மாநாடு ஓசூரில் வரவேற்புக் குழு அமைப்பு 

கிருஷ்ணகிரி, ஜூலை 6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்புக் குழு  அமைப்பு கூட்டம் ஓசூரில் ஞாயி றன்று (ஜூலை 6)  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.இளவரசன் தலைமையேற்றார். மாவட்டத் தலை வர் ஆர்.சக்தி வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி, மாநில இணை செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் விளக்கி பேசினர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஆர். பத்ரி, மாவட்டச் செய லாளர் சி.சுரேஷ் வாழ்த்திப் பேசினர். 150 பேர் கொண்ட மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  மாநில மாநாட்டு வரவேற்பு குழு வின் கௌரவத்தலைவராக பி.நாக ராஜ ரெட்டி, தலைவராக ஆர்.சேகர், செயலாளராக கே.இளவரசன், பொரு ளாளர் எம்.ஜி.நாகேஷ்பாபு தேர்வு  செய்யப்பட்டனர். துணை தலை வர்களாக புருஷோத்தம ரெட்டி,  ஆனந்தகுமார், ஆர்.கே.தேவ ராஜ், அனுமப்பா, டி.எஸ்.பாண்டியன்,  முருகேசன், துணை செயலாளர் களாக சி.கணேஷ், மாரிமுத்து நஞ்சா ரெட்டி, சேகர், ஹரிநந்தா, சி.முருகன் உள்ளிட்ட மாநில மாநாட்டு பணி களுக்கான குழுக்களும் அமைக்கப் பட்டன. வரவேற்பு குழு கூட்டத்திலேயே சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட நிதியும் பொருள்களும் வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.நாகேஷ் பாபு நன்றி கூறினார்.