தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு மாற்றக் கோரி
வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்
ரயில்வே வாரிய தேர்வு மையத்தை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தமிழ்நாட் டிலேயே அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்க ளன்று தபால் அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப் படும் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) காலி இடங்களுக்கான தேர்வை ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) நடத்தும் கணினி அடிப்படையிலான தேர்வு 1-இல் தமிழகத்தைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள் ளனர். அவர்களுக்கான சிபிடி தேர்வு 2-ஐ மார்ச் 19 ஆம் தேதி ரயில்வே தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இத்தேர்வுக்கான பெரும்பாலான தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே 1500-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பயணம் செய்து எழுதுவது போல் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் நீண்ட பயணம் செய்து தேர்வு எழுத முடி யாத சூழலும், நிதிச் சுமையும் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக இதில் தலையீட்டு தமிழ்நாட்டு இளை ஞர்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் மையத்தை அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திங்களன்று தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மவாட்டச் செயலாளர் ரா.மகாதீர், செயற் குழு உறுப்பினர் சந்தோஷ், நகரச் செய லாளர் தீபக், தலைவர் முரளி, பொருளா ளர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஷாஜகான், கார்வின், சூர்யா உள்பட பலர் தபால் அனுப்பினர்.