tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நெல்லையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 9- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நெல்லையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மேனகா தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் பி.உச்சி மாகாளி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வால் தொட ரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஷ்குமார் நிறைவுறையாற்றினார். ஆர்பாட்டத்தில் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், சங்க பொருளாளர் அசோக் நன்றி கூறி னார்.