tamilnadu

img

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.19- படிப்புக்கேற்ற, திறமைக்கேற்ற சமூக பாதுகாப்பான வேலை வேண்டும். அரசு மற்றும் பொ துத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளை நிரப்ப வேண்டும். இளைஞர்க ளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் நடை பெற்ற முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, உரிய விசாரணை மேற் கொள்ள வேண்டும்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை, குளித்த லையில் வாழைப்பழ ஜாம் தொ ழிற்சாலை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.க.சிவா தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி கண் டன உரையாற்றினார். முன்னாள் மாநில குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வம், மாவட்ட முன்னாள் தலைவர் எம்.தண்டபாணி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே. ராஜா, பொருளாளர் ராஜீவ்காந்தி, துணைச் செயலாளர் வி.நாகரா ஜன், துணைத்தலைவர் ரஞ்சிதா ஆகியோர் உரையாற்றினர். மாவட் டக்குழு உறுப்பினர்கள் அஜித் குமார், மணிகண்டன், கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி 
இதே போல் வாலிபர் சங்கம் சார்பில் எடத்தெரு அண்ணா சிலை அருகில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாநில குழு உறுப்பினர் வினோதினி, மாநகர் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் கிச்சான் இரட்டை மலை ஆகியோர் கண்டன உரை யாற்றினர். செயற்குழு உறுப்பினர் கள் தர்மா, ஏழுமலை, சேதுபதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜய், சந்துரு, விக்கி, யுவராஜ், சந்தோஷ், ஷாஜகான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் 
நாகையில் பேரணி, ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பேரணி, நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி முன் பாகத் துவங்கி, தேரடி வீதியில் நிறைவு பெற்று அங்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நிகழ்வுகளுக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் சிறப்புரையாற்றி னார். வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சியாமளாதேவி, மாவட்டப் பொருளாளர் டி.வெங்கட்ரா மன், மாவட்ட நிர்வாகிகள் கே.பி. மார்க்ஸ், ஏ.அறிவழகன், பி.விஜயேந் திரன், பிரபாகரன், ஜி.சிந்தன், ஏ. வடிவேல், டி.அருள்தாஸ், முருகா னந்தம், பி.எம்.நன்மாறன், எஸ்.மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.