tamilnadu

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம்!

சென்னை, ஜன. 19 - தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை அளிப்ப தற்கான கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்ஐஆர் (SIR) பணி களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களும், குறிப்பாக சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்களும் நீக்கப்பட்டிருப்பதாக அறி விக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாக்காளர் பட்டி யலில் இடம்பெற ஜனவரி 18 விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) நிறைவடைந்த நிலை யில், 13 லட்சத்து 03 ஆயி ரத்து 487 பேர் மட்டுமே பெயர்களைச் சேர்ப்பதற் கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.  முன்னதாக, தமிழ கத்தில் பொங்கல் பண்டிகை யை ஒட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாக வும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணிகளை ஜனவரி 28 வரை நீட்டிக்க வேண்டும், எனவும்; 2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.  இந்த சூழலில், தமிழ்நா ட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறி விப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படிவங்கள் சரி பார்க்கப்பட்டு பிப்ரவரி 17 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.