tamilnadu

சமூக விடுதலைப் போராட்ட வீரராக வலம் வந்த தலைவர் யெச்சூரி! - பேரா.மு.நாகநாதன்

2019-ஆம் ஆண்டில் சென் னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழித் துறையில் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்கார வேலர் நினைவு அறக்கட்டளை சொற்பொ ழிவைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி நிகழ்த்தினார்.‌ அவ்விழாவில் தமிழாய்ந்த புலவர் வீரமணி வரவேற்புரை ஆற்றினார். அவர், “கம்பராமாயணத்தில் இராம னைப் பற்றி கம்பர் குறிப்பிட்ட சில கவிதை மேற்கோள்களைச் சுட்டி- அவை தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அறி வாற்றலுக்கும், ஆளுமைக்கும் பொருந்து வதாக அமைகிறது” என்று குறிப்பிட்டார் . அவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய நான், “ஆந்திராவில் பல சீத்தாராமன்கள் உண்டு. இந்திய விடுதலைக்‌ களத்தில் உத்தமர் காந்தியின் நுழைவு, காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி யது. இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காந்தியார் தான் வலியுறுத்தினார்.

ஆனால் 1947-ஆம் ஆண்டிற்குப் பிறகு மொழிவழி மாநிலங்கள் அமை வதை ஒன்றிய அரசின் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆகியோர் விரும்பவில்லை. ஒன்றிய அரசு இந்த பிரச்சனையைத் தள்ளிப் போட பல்வேறு தடங்கலை ஏற்படுத்தியது. 1947-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் மொழிவழி மாநிலங்கள் அமைப்ப தை ஆய்வு செய்வதற்காக எஸ்.கே. தார் தலைமையில் ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது. ஒன்றிய அரசின் உணர்வுகளுக்கு ஏற்பவே ‘புதிய மாநிலங் கள் தேவையில்லை’ என்று தார் குழு, 1948-ஆம் ஆண்டு பரிந்துரையை வழங்கியது. இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் பல மாநிலங்களில் எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. மீண்டும் நேரு, பட்டேல் ஆகியோரால் பட்டாபி சீத்தாராமையா குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவும் பல கார ணங்களைச் சுட்டி, இக்கோரிக்கையைச் சில ஆண்டுகள் தள்ளிப் போடலாம்  என்று பரிந்துரையைச் செய்தது.

ஆந்திராவின் காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக புலுசு‌‌ சாம்பமூர்த்தி போன்ற விடுதலைப் போராட்டத்தலைவர்கள் இந்தத் தள்ளிப் போடும் போக்கிற்கு எதிர்வினை ஆற்றினர். 1951-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாளன்று விடு தலைப் போராட்ட‌ வீரரான கொல்லப்பட்டி சீத்தாராமசாமி தெலுங்கு பேசும் மக்க ளுக்குத் தனி மாநிலம் கோரி உண்ணா நிலையை மேற்கொண்டார். 35 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்ட சீத்தா ராமசாமியை வினோபா சந்தித்து உண்ணாநிலையைக் கைவிடும் படி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்விற்குப் பின்னர் பொட்டி சிறீராமலு 1952 அக்டோபர் 19 அன்று உண்ணா நிலையை‌ தொடங்கி, 58-ஆம் நாளில் உயிர் துறந்தார். பின்பு தான் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன.

ஆந்திராவில் பிறந்த பட்டாபி சீத்தா ராமையாவும், கொல்லுப்பட்டி சீதாராம சாமியும் விடுதலைப் போராட்ட வீரர்கள். மூன்றாம் வீரரான நமது தோழர் சீத்தாராம்  யெச்சூரி விடுதலைக்குப் பின் சமூகப் பொருளாதார விடுதலைப் போராட்ட வீரராக வலம் வருகிறார். களம் பல காணுகிறார். எனவே, கம்பரின் கற்பனைப் புனை வான சீத்தா இராமனை நமது பொது வுடைமை போராளி சீத்தாராம் யெச்சூரி யோடு ஒப்பிடாமல், நம்மோடு வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இரண்டு மானுட இராமன்களோடு ஒப்பிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்” என்று என் உரை யில் குறிப்பிட்டேன்.

மாணவர்கள் கைதட்டலை உணர்ந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, ‘எனக்குத் தமிழ் புரியும்’ என்று குறிப்பிட்டார். “’எவ்வகையிலும் மத இராமனுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை’ என்பதையே உங்கள் உரையும், மாணவர்கள் வர வேற்பும் தெரியப்படுத்துகிறது”‌ என்று கூறி என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார். இந்தியப் பொருளாதாரப் பிரச்சனை களைச் சரியான முறையில் புரிந்து பல அரிய கருத்துக்களை நாட்டிற்கும், உழைக் கும் மக்களுக்கும் வழங்கிய சீரிய சிந்தனை யாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்க ளுக்கு வீரவணக்கம்!