கவிஞர் நந்தலாலாவுக்கு எழுத்தாளர்கள் அஞ்சலி
கவிஞர் நந்தலாலா மறை விற்கு திருப்பூரில் தமுஎகச சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலை வர் கவிஞர் நந்தலாலா மறை வுக்கு, சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் - மங்கலம் சாலை, கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிறன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கவிஞர் நந்த லாலா உருவடப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.ஆர்.கணேசன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், கவிஞர் நந்தலாலா வின் பணிகளை நினைவு கூர்ந்து சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வ ரன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் கோவை சதாசிவம் ஆகியோர் உரையாற்றி னர். அங்கு கூடியிருந்த அனைவரும் நந்த லாலா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.