மதுரை,நவ.10- பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன் மதுரையில் நவம்பர் 10 அன்று காலமானார். அவருக்கு வயது 65. மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகரில் வசித்து வந்த எழுத்தாளர் இந்திரா செளந்தராஜனின் படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமையன்று காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்திரா செளந்தர்ராஜனின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.