மதுரை:
இளம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துவரும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தொழிலாளர்களையும், ரயில் பயணிகளையும் பாதுகாக்க வேண்டுமென சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில்தொழிலாளர்கள் திங்களன்று மதுரை மக்களவை உறுப்பினரும் ரயில்வே வாரியக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:- கடந்த 2019-ஆம் ஆண்டுஏப்ரல் 29-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற 54 தொழிலாளர் களுக்கு ஆறு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தப்பட்டுள் ளது. இது கொடிய தண்டனை யாகும். இதே ஆண்டில் ஏப்.30-ஆம் தேதி பங்கேற்ற 124 தொழிலாளர் களுக்கு 124 குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 90 தொழிலாளர்களை பணியாளர் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் ரயில் ஓட்டுநர், நிலையகட்டுப்பாட்டாளர், மைய கட்டுப்பாடு அறையில் பணிபுரியும் ரயில்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கள், பராமரிப்புப் பொறியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் போன்ற நிரந்தரப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இது பயணி களின் உயிருக்கும் நிறுவனத்தின்உடமைகளுக்கும் அச்சுறுத்த லாகும். தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் தொழிலாளர் நலத் துறையின் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் சட்ட ஆட்சி முறைக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம்சவால் விடுகிறது.
எனவே இளம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துவரும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தொழிலாளர்களையும், ரயில் பயணிகளையும் பாதுகாக்க நாடாளு மன்றத்தில் குரலெழுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.தொழிலாளர்கள் கூறியதாவது: கலைஞர் ஆட்சியில் மெட்ரோ ரயில் அறிமுகப் கடுத்தப்பட்டது. நேரடியாக ஐந்தாயிரம் பேரும், மறைமுகமாக பத்தாயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 250 நிரந்தரத்தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவருகிறது. கேசிஐசி, பிவிஜி இந்தியா ஆகிய தனியார் நிறுவனங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தில் புகுந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு தொழிலாளிக்கு மாதம்ரூ.60 சம்பளம் எனக் கணக்கிட்டுஇரண்டு தனியார் நிறுவனங் களுக்கும் பணம் வழங்குகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே சம்பளமாக வழங்குகின்றன. நிரந்தரத்தொழிலாள ர்களின் வேலை பறிக்கப்படுகிறது. இடஒதுக்கீடும் பறிக்கப்படுகிறது.
சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்கள் தில்லி மெட்ரோவில் பயிற்சி பெற்றவர்கள். இந்தத் தொழிலின் தனித்தன்மையான தொழில்நுட்பத்தில் தேர்ச்சிபெற்றவர்கள். நிரந்தரத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பார்க்கிங், தூய்மைப்பணி, மெட்ரோ இணைப்பு சேவை போன்ற பணிகளுக்கு அனுப்புகின்றனர். பயிற்சி பெறாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரயிலை இயக்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, கொச்சி, நாக்பூரில் மெட்ரோ ரயில்கள் தனியார் மயமாக வில்லை. சென்னையில் மட்டும் தனியாரை புகுத்தியுள்ளனர். எங்களை மத்திய அரசும், மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டுமென்றனர்.