15 கிராமங்களில் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தின் ஜலோர் மாவட் டத்தில் உள்ள காசிப்பூரில் டிசம்பர் 21ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த பஞ்சாயத்து உத்தரவில்,”ஜனவரி 26 முதல் காசிப்பூர், பவாளி, கல்டா, மனோஜியவாஸ், ரஜிகாவாஸ், தட்ல வாஸ், ராஜ்புரா, கோடி, சித்ரோதி, அல்டி, ரோப்சி, கனத்வால், சவிதார், ஹத்மி கி தானி மற்றும் கான்பூர் ஆகிய 15 கிரா மப்பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண் கள் மற்றும் திருமணமான பெண்கள் கேமரா வசதி கொண்ட செல்போன்களை (ஸ்மார்ட்போன்கள்) திருமணம், பொது நிகழ்வு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குச் செல்லும்போது கொண்டு செல்லக்கூடாது. ஆன்லைன் கல்வி பயி லும் பெண்கள் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம்” என பஞ்சாயத்து நிர்வாகிகளில் ஒருவரான சுஜனராம் சவுத்ரி அறிவித்தார். இந்த நவீனகால உலகில் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவிலும் தலிபான் அர சைப் போல (பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆப்கானிஸ் தான் அரசு) அடாவடி உத்தரவை பிறப் பிக்கும் கிராம பஞ்சாயத்து உள்ளன என்று மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
