tamilnadu

‘பெண்கள் யாருடைய கனவுப் பொருளும் அல்ல!’ சி.வி சண்முகம் பேச்சு அருவருக்கத்தக்க ஆணாதிக்க வன்முறை!

‘பெண்கள் யாருடைய கனவுப் பொருளும் அல்ல!’ சி.வி சண்முகம் பேச்சு அருவருக்கத்தக்க ஆணாதிக்க வன்முறை!

சென்னை, மார்ச் 17 - பெண்களை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பாலியல் ஒடுக்குமுறைப் பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.    இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசியல் கேலி என்ற பெயரில் பெண்களை அவமதிப்பதா? தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறை களை தடுக்க வலியுறுத்தி அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சிக்கும் பெயரில், “எனக்கு ஒரு கனவு... என ஆரம்பித்து தமிழ்நாட்டின் பிரபல பெண் திரைக்கலைஞர் பெயரை சொல்லி, ‘அவர் வேண்டும்’, என்றும்; அடுத்ததாக... ‘அவரைத் திருமணம் செய்ய விருப்பம் என்று யாராவது சொன்னால், முதல்வர் திருமணம் செய்து வைப்பாரா?’ எனப் பேசியிருப்பது, அரசியல் கேலி என்ற பெயரில் பெண்களை முழுமையாக அவமதிக்கும்  ஒரு அருவருப்பான ஆணாதிக்க மொழி வன்முறையாகும். போராட்டத்தில் இறங்குவோம் இது ‘கருத்து’ அல்ல, விமர்சனமும் அல்ல,  பெண்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும், அவர்களின் உரிமை, விருப்பம், சுதந்திரம் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் பாலின ஆதிக்க அரசியல் வன்முறை. சி.வி சண்முகத்தின் பேச்சு, பெண்களை உயிரும் உணர்வும் உள்ள சக மனுசியாக பார்க்காமல் நுகர்வுப் பொருளாக, உரிமை, சுதந்திரம், கருத்து, விருப்பம் எதுவும் இல்லா தவர்களாக கருதி பேசியிருப்பது கடும் கண்ட னத்திற்குரியது. சி.வி. சண்முகம் போன்றோர் தொடர்ச்சியாக இது போன்று அருவருக்கத்தக்க வகையில் பெண்ணுரிமைக்கு எதிராக ஆணாதிக்க கருத்துக்களை பேசி வருவதை தமிழக பெண்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். சி.வி சண்முகத்தின் இந்த பேச்சுக்கு எதிராக போராட்டங்களை தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலுவோடு நடத்தும். அதிமுக ஆதரிக்கிறதா? அரசியல் மேடையைப் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு, சமூகத்தில் ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க வன்முறைக்கு அரசியல் ஒப்புதல் அளிப்பதாகும். பெண்களை இழிவுபடுத்தும் இந்த மனநிலை யையும் சி.வி சண்முகத்தின் பேச்சையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆத ரிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். சி.வி சண்முகத்திற்கு எதிராக தமிழக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை அவமதிப்பது, அவமதிக்கும் பேச்சுக்கு எதிரான வழக்கு என இந்திய தண்ட னைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடும் நடவடிக்கை தேவை அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் பெண்களை இழிவு படுத்தும் பாலியல் அருவருப்பு மிக்க, ஆபாச மான பொதுப் பேச்சுகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களைப் பொருளாக பார்க்கும், பாலியல் ஒடுக்குமுறை கலந்த அரசியல் பேச்சு களுக்கு எதிராக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் யாருடைய ‘கனவுப் பொருளும் அல்ல, பெண் சுதந்திரமாக சுயமரியாதையாக கண்ணியத் தோடு சமூகத்தில் வாழ உரிமையானவள். இதற்கு எதிரான நோக்கத்தோடு எந்த இடத்தில் இருந்து கருத்து வந்தாலும் அதை அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் அனுமதிக்காது.   பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியல் மொழிக்கு எதிராக,  பெண்களின் மரியாதையை கேலி செய்யும் குரலை  அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முறியடிப்போம்.  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.