மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.25 - “மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களிடம் விண்ணப்பம் வாங்கும் பணி நான்காம் கட்டமாக தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் ஜூன் மாதம் முதல் நடைபெறவுள்ளது” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு, வர்த்தக் துறை மானியக் கோரிக்கை கள் மீது வெள்ளிக்கிழமை (ஏப்.25) விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சில கேள்வி களை எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்டத் தின் அடிப்படையில், தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான வர்களை தேர்ந்தெடுத்து உரிமைத் தொகை வழங்கப்படுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “அதேநேரம், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் குறித்த செய்தி யும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. சட்டப்பேரவையில் அதுதொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடி யாக அந்த கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். வருகிற, ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில், அந்த கோரிக் கைகளை கேட்கக் கூடிய பணிகளைத் தொடங்க இருக்கிறோம். 9 ஆயிரம் இடங்களில் அந்தப் பணி நடைபெறவிருக் கிறது. அந்த சமயத்தில், கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டு போயி ருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப் பித்தால், நிச்சயம் விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.