ஆராய்ச்சி நிறுவனத்தில் மகளிர் தின விழா புதுக்கோட்டை
, மார்ச் 17 - எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி ரூ சயின்ஸ் சொசைட்டி மாநிலச் செயலாளர் டி.சாந்தி மகளிர் தின சிறப்புரையாற்றினார். சமம் முன்னாள் மாநில ஒருங்கி ணைப்பாளர் என்.கண்ணம்மாள், மாநகராட்சி உறுப்பி னர் செந்தாமரைபாலு, மேனாள் அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.மேகலாமுத்து உள்ளிட்டோர் பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் மூன்று மாத கால ஊட்டச்சத்து பயிற்சி முடித்த 20 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மகளிர் தின விழா தஞ்சாவூர்
, மார்ச் 17 - தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் 500 பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவில், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. தொடர்ந்து, பெண் பணியாளர்களை ஊக்கு விக்கும் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அனைத்து பெண் பணியாளர்களும் கலந்து கொண்டனர். ஆண்டு முழு வதும் அயராது உழைத்த பெண்களுக்கு மருத்துவ மனை சார்பில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.
ஊரக வேளாண் பணி அனுபவ துவக்க விழா
பாபநாசம், மார்ச் 17 - சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழ கத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள், வேளாண்மை பாடநெறியான ஊரக வேளாண்மை பணி அனுபவத்திற்கான துவக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே காட்டுத் தோட்டம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவ லகத்தில் நடந்த விழாவில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) மாலதி, வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சாருமதி, தலைட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் புல முதன்மையர் முனைவர் சோழன், வேளாண்மை உதவி இயக்குநர் இந்திரஜித், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தீபா, தனட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்ற னர். அலுவலக வளாகத்தில் புங்கன், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இப்தார் நோன்பு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, மார்ச் 17 - திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஞாயிறன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேரா சிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. ஜவாஹி ருல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செய லாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் உட்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.