tamilnadu

img

ஓய்வூதிய மதிப்பீட்டு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!

ஓய்வூதிய மதிப்பீட்டு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!

ஓய்வூதியர் சங்க சிறப்பு மாநாடு வலியுறுத்தல்

சென்னை, பிப்.27- ஓய்வூதிய மதிப்பீட்டு திருத்தச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று ஓய்வூதியர் சங்கங்களின் சிறப்பு மாநாடு வலி யுறுத்தி உள்ளது. ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்து ‘பொது ஓய்வூதியர் சங்கங் களின் மேடை’ என்ற அமைப்பை உரு வாக்கி உள்ளன. இந்த அமைப்பு சார்பில் வெள்ளி யன்று (பிப்.27) சென்னையில் ஓய்வூ திய மதிப்பீட்டு திருத்தச் சட்டத் திற்கு எதிராக சிறப்பு மாநாடு நடை பெற்றது. ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும், 8 ஆவது ஊதியக் குழு பணிக்கான குறிப்பாணையில் ஓய்வூதியத் திருத்தத்தை இணைக்க வேண்டும், நிதி பங்களிப் பில்லா ஓய்வூதியத்தின் செலவு என்ற  வாசகத்தை நீக்க வேண்டும், பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை  வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. து.ரவிக்குமார் எம்.பி., மாநாட்டில் பேசிய து.ரவிக்குமார் எம்.பி., “இந்தியாவில் ரூ.20 ஆயிரத் திற்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுகிறவர்கள்தான் அதிகமாக உள்ளனர். தற்போதுள்ள ஓய்வூதி யத்தை வைத்து குடும்பம் நடத்த  முடியாத நிலை உள்ளது. இந்நிலை யில், 1972 ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு ஓய்வூதிய மதிப்பீட்டு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு  முரணாக கொண்டு வந்துள்ள இந்தச்  சட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் எழுப்புவோம்” என்றார். ஆறுமுகநயினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஆறுமுகநயினார் பேசுகையில், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தால் ஓய்வூதியமே பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் தொடரும். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றார். ஓய்வூதியர் சங்கங்களின் மேடை யின் தலைவர் டி.பாலசுப்பிரமணி யன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில ஒருங்கிணைப் பாளர் ஆர்.ராஜசேகர் துவக்கவுரை யாற்றினார். திமுக செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங் கோவன், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ரவீந்திர நாத் சிறப்புரையாற்றினார். அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் தலை வர் டி.கோபாலகிருஷ்ணன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதி யர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  டி.கோவிந்தராஜ், அகில இந்திய போஸ்டல் அண்டு ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலா ளர் பி.மோகன், சஞ்சார் நிகாம் ஓய்வூ தியர் சங்க உதவிப் பொதுச் செயலா ளர் ஆர்.ராஜன் உள்ளிட்ட தலைவர் கள் உரையாற்றினர். எஸ்.சுந்தர கிருஷ்ணன் தீர்மானத்தை வாசித் தார். மேடையின் பொருளாளர் சி.ஒளி நன்றி கூறினார்.