tamilnadu

பெண்களை இழிவாகப் பேசிய சி.வி.சண்முகம் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதா?

பெண்களை இழிவாகப் பேசிய சி.வி.சண்முகம் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதா?

சென்னை, பிப்.27- அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பெண்களுக்கு எதிராக வெளியிட்ட அவமதிப்பு மற்றும் இழிவு நிறைந்த கருத்துகள் தொடர்பான வழக்கில், மாநில மகளிர் ஆணை யம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்திருப்பது மிகுந்த கவலை யளிப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி மற்றும் மகளிர் ஆணைய நடவடிக்கை விழுப்புரத்தில் கடந்தாண்டு நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், பெண் களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சி.வி.சண்முகம் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில் மாநில மகளிர் ஆணையத் தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசா ரித்த ஆணையம், சி.வி.சண்முகத்திற்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜ ராகாததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர்  11-ஆம் தேதி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை  எடுக்க டி.ஜி.பி.க்கு ஆணையம் பரிந்துரை செய்தது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விமர்சனம் இந்த உத்தரவை தற்போது ரத்து செய்துள்ள  உயர் நீதிமன்றம், புகாரின் சாராம்சத்தை விவாதி க்காமல் நடைமுறை சார்ந்த தொழில்நுட்பக் கார ணங்களையே முதன்மைப்படுத்தியுள்ளது. ஆணையத்தின் தலைவர் மட்டுமே கையெழுத் திட்டுள்ளார் என்பதைக் காரணமாகக் கொண்டு, முழு நடவடிக்கையும் சட்டப்பூர்வமற்றது எனக்  கூறியிருப்பது, பெண்களுக்கு எதிரான அவமதிப் பைக் குறைத்து மதிப்பிடும் போக்கை வெளிப் படுத்துவதாக மாதர் சங்கம் கருதுகிறது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர்  ஜி. பிரமிளா மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர்  அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள், அவை நேரடியாக வன்முறையைத் தூண்டா விட்டாலும், சமூகத்தில் பெண்களை இரண்டாம்  நிலை குடிமக்களாகப் பார்க்கும் மனப்பான்மையை  வலுப்படுத்துகின்றன. இதுபோன்ற பேச்சுகள், பாலின அடக்குமுறை மற்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கான சமூக அடித்தளத்தை  உருவாக்குகின்றன. இதனை ‘வெறுப்புப் பேச்சு அல்ல’ என ஒதுக்கிவிடுவது அரசியலமைப்பு மதிப்பு களுக்கு எதிரானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியல் அதிகாரமும் பொறுப்பும் பொது வாழ்வில் இருப்பவர்கள், குறிப்பாக அர சியல் அதிகாரம் கொண்டவர்கள், பேசும் ஒவ்வொரு  சொல்லும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இத்தகைய இழி வான கருத்துகளைத் தனிப்பட்ட சிந்தனையாக கருத முடியாது; அவை அதிகாரத்தின் வாயிலாக வெளிப்படும் பாலின வன்முறையாகவே பார்க்கப் பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு விடுக்கப்படும் கோரிக்கை பெண்கள் அநீதிகளுக்கு எதிராக நம்பிக்கை யுடன் அணுகும் சட்டப்பூர்வ அமைப்பான மாநில  மகளிர் ஆணையத்தின் அதிகாரத்தை, நடைமுறை  குறைபாடுகள் என்ற பெயரில் பலவீனப்படுத்து வது, பெண்கள் நீதியை நாடும் பாதையையே சுருக்கும் அபாயத்தை உருவாக்கும். நடைமுறை  சார்ந்த குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரி செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர,  புகாரின் உள்ளடக்கத்தையே நிராகரிக்கக் கூடாது. இந்தத் தீர்ப்பு பெண்களின் மரியாதை, சமத்து வம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ள அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம், பெண்களை இழிவுபடுத் தும் பேச்சுகளைச் சாதாரணமாக்கும் போக்குக்கு  எதிராகத் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன் னெடுக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளது.