அம்பையில் மாதர் சங்கம் போராட்டம்
திருநெல்வேலி, ஜூன் 19- நுண்நிதி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், ஊரடங்கு காலம் முடியும் வரை கடனை கேட்டு நெரு க்கடி கொடுக்க கூடாது, நெரு க்கடி கொடுப்பது மட்டு மின்றி அவதூறாக பேசும் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், ஹெல்ப் லைனை உடனடி யாக துவங்க வேண்டும், சுய உதவிக்குழு பிரச்சனை களை விசாரிக்க தனி அதி காரி நியமிக்க வேண்டும், அரசு அதிகாரிகள் நுண்நிதி நிறுவனங்களை அழைத்து பேசுவது மட்டுமின்றி, பத்தி ரிக்கை செய்தி வெளியி டுவது, பொது இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நெல்லை மாவ ட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பாக வைரா விகுளம் தலைவர் மேரி தலை மையில் போராட்டம் நடை பெற்றது. செயலாளர் ராமர்கனி உள்பட 30 பெண்கள் கலந்து கொண்டனர். போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து தாசில்தார், கல்லிடை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்கள் பற்றி அவதூறாக பேசிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி னர். மேலும் மாவட்ட ஆட்சி யர் குழு கடன் சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறி விப்பை சுட்டிகாட்டி இனி மேல் பிரச்சனைகள் செய்தால் எனக்கு போன் பண்ணுங்கள் என்றும் கூறி னார். பின்னர் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்கா ணிப்பாளரிடமும் மனு கொடு க்கப்பட்டது. போரட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.கற்பகம், ராமர்கனி, மேரி, சந்திரா, சரஸ்வதி, ஜெய்சித்ரா, கணபதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.