tamilnadu

img

விலங்குகள் சரணாலயம் எனக் கூறி 165 கிராம மக்களை வெளியேற்றுவதா? ஓசூரில் விவசாய தொழிலாளர்,விவசாயிகள் போராட்டம்

விலங்குகள் சரணாலயம் எனக் கூறி 165 கிராம மக்களை வெளியேற்றுவதா? ஓசூரில் விவசாய தொழிலாளர்,விவசாயிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி,நவ.14-  பட்டா மற்றும் வன உரிமை கேட்டு ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாராட்சியர் எல்லைக்குட்பட்ட சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், புறம்போக்கு நிலம், பைமாசி மற்றும் இனம் அனுபவ நிலங்களில் குடியிருப்போர், அத்துடன் பல தலைமுறைகளாக விவ சாயம் செய்து, குடியிருந்து வரும் கோயில், வக்போர்டு, மடம் மற்றும் அறக்கட்டளை நிலங்களுக்கும் பட்டாக் கள் வழங்கிட வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் இணைந்து ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டத்தை நடத்தின. வட்டத் தலைவர் ராஜா ரெட்டி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், நாகராஜ ரெட்டி முன்னிலை வகித்தார்.  விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. இரவீந்திரன் சிறப்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர் பி. பெருமாள் மற்றும் மாவட்டச் செயலா ளர் சி. பிரகாஷ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர் முருகேசன், பொருளாளர் எம்.எம். ராஜு, மற்றும் நிர்வாகிகள் ஆர்.கே. தேவராஜ், அனுமப்பா, சி. குமரன், டி. ராஜா, பி. குண்டப்பா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்ட னர். மனு வாங்க சாராட்சியர் மறுப்பு பட்டா கேட்டு 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது கோரிக்கை மனுக் களைச் சமர்ப்பிக்கச் சாராட்சியர் அலு வலகத்திற்குச் சென்றபோது, சாராட்சி யர் வெளியில் வந்து மனுக்களை வாங்க மறுத்தார். இதனால் தலைவர்களும், மக்களும் சாராட்சியர் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு, நேரில் வந்த சாராட்சி யர் மனுக்களைப் பெற்றுக் கொண்டது டன், கோரிக்கைகள் குறித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 கோரிக்கைகள்:

வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், அத்துடன் குடியிருக்கும் வீடுகளுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டும். வக் போர்டு, கோவில் நிலங்களில் விவசாயம் செய்து குடியிருக்கும் மக்களுக்குப் பட்டாக்கள் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமர் நிலங்களை உரிய நில உரிமைப் பயனாளிகளுக்கு மீட்டுத்தர வேண்டும். வனப்பகுதிகளில் வாழும் பிற பட்டியலின சாதியினருக்கும், மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் 2006 வன உரிமைச் சட்டப்படி, பாரம்பரியமாக வன நிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி, பட்டியலின மக்களுக்கும், இதரப் பகுதி மக்களுக்கும் நில உரிமைப் பட்டா வழங்க வேண்டும்.திமுக ஆட்சிக் காலத்தில் 1989 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட 11.68 தடை ஆணையை நீக்கி, வனப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழும் குடியிருப்புகளுக்கும், அவர்கள் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கும் பட்டாக்கள் வழங்கிட வேண்டும். வனப்பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ், பழங்குடி, ஆதிதிராவிடர் மற்றும் பிற பட்டியலின சாதியினருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்துள்ள வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும், அத்துடன் அப்பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளி ஏற்படுத்த வேண்டும். காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட 165க்கும் மேற்பட்ட கிராமங்களில், 75 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கக்கூடிய மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். மேலும், அவர்களது வீடுகளுக்குப் பட்டா, வீடு மராமத்து செய்யும் உரிமை, ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான உரிமை, இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைப் பழுது நீக்குவதற்கான உரிமை மற்றும் காலம் காலமாக இருந்த கால்நடைகள் மேய்ச்சல் உரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஓசூர் மாநகரை ஒட்டியுள்ள, கால்நடைப் பராமரிப்புக்காகப் பயன்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மத்திய கால்நடைப் பண்ணையை, தமிழக அரசு கால்நடைத் துறையின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தத் திட்டமிட வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டம் கொல்லட்டியில் பட்டு வளர்ச்சித் துறைக்காக ஒதுக்கி, தற்போது உபரியாக உள்ள நிலத்தை அரசு தோட்டக்கலைத் துறைக்கு பயன்படுத்த வேண்டும்.