tamilnadu

img

தற்கொலைகள் அதிகரித்தது எப்போது? உண்மையை மறைத்த பாஜக மாநில நிர்வாகி

மதுரை:
தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடுநடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் கீரனூர் ஊராட்சியில் 161 பேர் உண்மையான பயனாளிகள் இல்லை. போலியாக பதிவு செய்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என கீரனூர் ஊராட்சியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் தமிழக முதல்வர்உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். இந்த ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதை வழக்கறிஞர் இராமகிருஷ்ணன், தமிழ்நாடுகரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் தனிப் படை அமைத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் மனம் வலிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகள் தற்கொலை குறைந்துள்ளது என அதிமுகவுடன் கைகோர்த்துள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு இடத்தை காலிசெய்தார்.தற்கொலையை பொறுத்தமட்டில் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகம் என்று கூறினார். சாமார்த்தியமாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நான்குநாட்களுக்கு முன்னர் வெளியிட்டஉண்மைத் தகவலை மறைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பொய் யுரைத்தார்.

குற்ற ஆவணக்காப்பம் கூறுவதென்ன?
கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 43 ஆயிரம் விவசாய கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்றுதேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இதில் 32 ஆயிரத்து 563 பேர்கூலித் தொழிலாளர்கள், 10 ஆயிரத்து 281 பேர் விவசாயிகள். ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் கூலித் தொழிலாளர்கள் மட் டும் 23.4 சதவீம். கடந்த 2018-ஆம்ஆண்டில் 30 ஆயிரத்து 132 பேர் தற்கொலை செய்த நிலையில் 2019-ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள் 10,281 பேர். இதில் 5,957 பேர் விவசாயிகள், 4,324 பேர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இது நாட்டில் தற்கொலை செய்தவர்களில் 7.4 சதவீதம் (1,39,123) ஆகும்.2018-ஆம் ஆண்டில் தற் கொலை செய்து கொண்ட விவசாயிகள் அல்லது விவசாய கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,349 (7.7 சதவீதம்).2019 ஆம் ஆண்டில் தற் கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 5,563 பேர் ஆண்கள். 394 பேர் பெண்கள். விவசாயத் தொழிலாளர்களில் ஆண்கள் 3,749 பேர். பெண்கள் 575 பேர்.உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும். இதுத பாஜகவிற்கு முற்றிலும் பொருந்தும்.