tamilnadu

img

‘கருப்பு, சிவப்பு, நீலம்’ சேர்ந்திருக்கும் போது காவிகளால் நம்மை எதுவும் செய்ய முடியாது!

‘கருப்பு, சிவப்பு, நீலம்’ சேர்ந்திருக்கும் போது காவிகளால் நம்மை எதுவும் செய்ய முடியாது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை, நவ. 8 - “கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து இருக்கும் போது,  எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது”  என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 அறிவுத் திருவிழா” நிகழ்வை தொடங்கி வைத்தும், “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டும் சனிக்கிழமையன்று அவர்  சிறப்புரை ஆற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:  முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப் பட்டு, 1967-இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சி யைப் பிடித்து சாதனை படைத்தது திமுக. “ஏதோ கட்சி யைத் தொடங்கினோம், அடுத்த முதல்வர் நான்தான்”  என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வர வில்லை. கட்சியின் தலைவர்களில் இருந்து, கடைக் கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணி யாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து  திமுக உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல!  சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்த னையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடா மல், திமுக இதழ்களை திமுகவைச் சேர்ந்த ஒருவர்  வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக்  கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்!  இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், வெறும் திமுக புத்தகங்களையும் திராவிட இயக்கப் புத்தகங்களையும் மட்டும் வைக்கா மல், பொதுவுடைமை இயக்கப் புத்தகங்கள் - அம்பேத் கரியப் புத்தகங்கள் - பெண்ணியப் புத்தகங்கள் என்று அனைத்து வகைப்பட்ட அரசியல் புத்தகங்களுக் கும் களமாக, முற்போக்குப் புத்தகக் கண்காட்சியை  திமுக இளைஞரணியினர் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!  கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந் தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக திமுக இருப்பதால்தான், எத்தனை பெரிய  எதிரிகள் வந்தாலும் - எத்தனை பெரிய தந்திரங் களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை. அதனால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு  வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார் கள்! அதுதான், எஸ்ஐஆர். இதற்கு எதிராகச் சட்ட ரீதியாகவும் – அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போ கிறோம், போராடுவோம். அதேநேரம் களத்தில் வேலை செய்யும் திமுகவினர் போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய  வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் களத்தில் பணியாற்ற வேண்டும்.  கருப்பு - சிவப்பு - நீலம் - சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது!  இந்தியாவின் ஜனநாயகத்தையும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026 இல் மாபெரும் வெற்றி யைப் பெறும்! இவ்வாறு முதலமைச்சர் பேசியுள்ளார்.