tamilnadu

img

ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘வாட்ஸ் அப்’ குழு

ரயிலில் பெண் பயணிகளின்  பாதுகாப்புக்கு ‘வாட்ஸ் அப்’ குழு

ரயில் பயணத்தின் போது பெண் களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் சார்பில் “ரயில் பெண் பயணி கள் பாதுகாப்பு” என்ற ‘வாட்ஸ்அப் குழு’  அமைக்கப்பட்டுள்ளது. இதை ரயில்வே டி.ஜி.பி. வன்னியபெருமாள் தொடங்கி வைத்தார்.  இதில் தினந்தோறும் ரயிலில் பய ணிக்கும் பெண்கள் காய்கறி வியாபாரி கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள ரயில்வே பெண் போலீ சார் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, இவர்கள் குழந்தை பருவம்  முதல் ரயில் பயணம் செய்வதால் ரயில் பயணத்தில் பெண்களிடம் தொந்தரவு செய்பவர்கள், குற்றம் செய்பவர்கள் குறித்த விவரங்களை அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த குழுவில் சந்தே கப்படும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடு படுபவர்கள் குறித்த தகவலை தெரிவித் தால், போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க  எளிதாக இருக்கும். ரயில்வே டி.ஜி.பி. அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் இதுபோன்ற குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரயில் பயணத்தின் போது தாங்கள் பார்க்கும் வழிப்பறி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களையும் இந்த வாட்ஸ்அப் குழுவில் ரகசியமாக  பகிர்ந்து கொள்கிறார்கள். சென்னையில் 23  ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே  போலீசில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.