பிரேசிலில் நடப்பது என்ன?
பிரேசில் காப் 30 காலநிலை உச்சிமாநாடு பிலேம் (Belém) நகரில் நவம்பர் 10 அன்று தொடங்கி நவம்பர் 21 2025 வரை நடைபெறுகிறது. இதில் 190 உலக நாடுகள் கலந்துகொண்டுள்ளன. உலக நாடுகள் இது பற்றி ஒன்று கூடி காலநிலை பற்றி பேச இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதால் இது போன்ற காலநிலை மாநாடுகள் சண்டை சச்சரவுகளுடன் நடந்தாலும் அவை இன்றும் சூழல் விஞ்ஞானிகள், பொது மக்களால் உற்று நோக்கப்படுகிறது. கடந்த வாரம் குறைந்தபட்சம் 50 உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை அவசரநிலையை விவாதிக்க அங்கு சென்றனர். உலகின் மழைக்காடுகள் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் வெப்ப உயர்வால் வெறும் புல்வெளிப் பகுதிகளாக, கார்பனை உறிஞ்சுவதற்கு பதில் உமிழ் கின்றன. பவளப் பாறைகள் அழிந்துவரு கின்றன. பனிப்படலங்கள் உருகுகின்றன. தூந்திரப் பகுதிகளில் இருந்து மீத்தேன் உமிழப்படுகிறது. இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர், அறிவியலை மறுப்பதில் உலகப் புகழ்பெற்ற யு எஸ்ஸின் டொனால்டு டிரம்ப் போன்றோர் தவிர யு கே, ஐரோப்பிய ஒன்றி யம், ஜெர்மன் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரி செல்சிய ஸிற்குள் வைத்திருக்க இந்த மாநாடு உதவுமா என்பதே இப்போது முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. சில சுயநல அரசியல், கார்ப்பரேட் முதலாளிகள் காப் 30 இல் எட்டப்படும் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பின்னோக்கித் தள்ள முனைப்புடன் செயல்படுகின்றனர். இவர்கள் ஒருபோதும் உலக மக்களால் மன்னிக்கப் படமாட்டார்கள் என்று ஐநா தலைவர் மாநாட்டில் கூறினார். பல பங்கேற்பாளர்கள் மூடப்பட்ட குளி ரூட்டப்பட்ட கூடங்களில் அமர்ந்து அவர்களின் காலிற்கு கீழே அமேசான் போன்ற காடுகள் அழிந்துவருவதை உணர மறுக்கின்றனர் என்று சூழல் போராளிகள் குரல் எழுப்புகின்றனர். ஆபத்தான நிலையில் பூமி சூடாகிவரும்போது இந்த மாநாடுகள் முன்பு சாதித்ததை, வருங் காலத்தில் எதை சாதிக்கும் என்பதை பற்றி சுருக்கமாகக் காணலாம். ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு 1992 இல் முதலில் தோற்று விக்கப்பட்டபோது பசுமைக் குடில் வாயு உமிழ்வு குறையும் என்று நம்பப்பட்டது. ஆனால் மேலும் மேலும் உலகம் புதை படிவ எரிபொருட்களால் கட்டியெழுப்பப் பட்டபோது உணவு, கட்டடங்கள், தொழிற்துறை, போக்குவரத்து என்று எல்லா வற்றிலும் அது நீக்கமற ஆக்ரமிக்கத்தொடங்கி யது. ஐநாவின் காலநிலைக்கான முயற்சி கள் கேள்விக்குறியாக்கப்பட்டது. கார்ப்ப ரேட்டுகள், சில எண்ணெய் வள நாடுகள் இதற்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தன. முதலாளிகள் அரசுகளுடன் பேசினர், மக்களிடம் தவறான செய்திகளை பரப்பினர். அவசியமான முறையில் பல அரசுகள் செயல்படவில்லை. 1997 இல் கியாட்டோ உடன்படிக்கை பணக்கார நாடுகள் பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் யு எஸ் போன்ற நாடுகள் இதை ஏற்கவில்லை. 2009 இல் கோபன்ஹேகன் மாநாடு தொடங்கி யபோது இந்த வாயுக்களின் உமிழ்வு பெருமள வில் அதிகரித்தது. பல நாடுகள் கியேட்டோ உடன்படிக்கையை ரத்து செய்ய முயன்றன. அடுத்த ஆண்டு இந்த உடன்படிக்கை சட்ட அங்கீகாரத்தை அடைந்தபோதிலும் அந்தக் கூட்டம் குழப்பங்கள், குற்றச்சாட்டுகளுடன் முடிவடைந்தது. அப்போது வெப்ப உயர்விற்கான கணிப்பு 6 டிகிரி என்ற நிலைக்கு மாறியது. 2015 பாரிஸ் மாநாட்டில் வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. 2021 கிளாஸ்கோ மாநாட்டில் இந்த வரையறை மீண்டும் வலியுறுத்தப்பட் டது. ஆனால் காப் 30 வாக்குறுதிகளை விட செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகளவிலான புதுப்பிக் கத்தக்க ஆற்றல் முதலீடு ஆண்டுதோறும் 2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. சீன உமிழ்வு நிலைப்படுத்தப்பட்டு அது விரைவில் சுழிநிலைக்கு வரும் என்று கருதப்படுகிறது. அங்கு பாதிக்கும் மேற்பட்ட கார்கள் மின்மயமாக்கப்பட்டுவிட்டன. காற்று, சூரிய மின் ஆற்றல் அங்கு விலை மலிவாக உள்ளது. மற்ற நாடுகளும் இதைப் பின்பற்றி னால் புவி வெப்ப உயர்வு கட்டுப்படுத்தப்படு வது உறுதி. காப் மாநாடுகள் பேச்சு வார்த்தை கூடங்களில் இருந்து அன்றாட வாழ்க்கைக்கான நடைமுறைக்கு வர வேண்டும் என்று பிரேசில் மாநாட்டில் சூழலி யலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். நல்ல முடிவுகள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் நாமும் காத்திருப்போம்.