tamilnadu

img

கல்யாண் நகரில் சிமெண்ட் ஆலை அமைக்க விட மாட்டோம் மகாராஷ்டிராவில் அதானிக்கு எதிராக திரண்ட கிராம மக்கள்

கல்யாண் நகரில் சிமெண்ட் ஆலை அமைக்க விட மாட்டோம்  மகாராஷ்டிராவில் அதானிக்கு எதிராக திரண்ட கிராம மக்கள்

மும்பை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி, அம்புஜா என்ற பெயரில் சிமெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது அதானி குழு மத்தின் துணை நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் அதானியின் அம்புஜா சிமெண்ட் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண் ணத்தில் பாஜக - மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜக ஆளும் மாநில அரசுகள் “அம்புஜா சிமெண்ட் லிமிடெட்” நிறுவனத்திற்காக பல்வேறு சலு கைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா அரசு, அம்மாநிலத்தின் மும்பை அருகே கல்யாண் நகரில் அம்புஜா சிமெண்ட் நிறுவன ஆலை அமைக்க நிலம் மற்றும் பல்வேறு சலுகை வழங்கியுள்ளது.  26.13 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த சிமெண்ட் ஆலை இடத்தில் 5.49 ஹெக்டேர் அரைக்கும் அலகு அமைக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில், இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் கல்யாண் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிமெண்ட் ஆலை அமையவுள்ள பகுதியான மோகோன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அப்போது மோகோன், மண்டா, அட்டாலி மற்றும் அம்பிவ்லி கிராம மக்கள் கல்யாண் நகரில் அதானியின் அம்புஜா சிமெண்ட் ஆலையை  அனுமதிக்க மாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எங்களது எதிர்ப்பை மீறி ஆலை அமைத்தால் போராட்டம் நடத்து வோம் என கிராம மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மோகோனைச் சேர்ந்த 53 வயதான ஆசிரியர் ரமேஷ் கோ னார் கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளரிடம் கூறுகையில்,”அம்புஜா சிமெண்ட் ஆலை திட்டம் எங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும். அதே போல சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். காற்று மற்றும் நீர் மாசுபாட்டை யும் உருவாக்கும் என்பதால் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கி றோம்” என அவர் கூறினார். அதானிக்கு தொடர் எதிர்ப்பு வாக்குத் திருட்டு குற்றச் சாட்டுக்கு இடையே கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைந்தவுடன் அதானிக்காக அனைத்து சலுகை களையும் மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இதில் முதன்மையா னது தாராவி மறுவளர்ச்சித் திட்டம். இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைப் போல, தற்போது கல்யாண் நகரில் அதானியின் அம்புஜா சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கும் போ ராட்ட எச்சரிக்கையுடன் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. மும்பை பெருநகரப் பகுதியில் அதானிக்கு இது இரண்டாவது எதிர்ப்பாகும்.