tamilnadu

img

மதச்சார்பின்மையை பாதுகாக்க சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் வெற்றியை உறுதி செய்வோம்! செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரை

மதச்சார்பின்மையை பாதுகாக்க  சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் வெற்றியை உறுதி செய்வோம்! செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரை

சென்னை, ஏப். 3- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் (சென்னை) போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் அறிமுகக் கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்  புதனன்று (ஏப். 1) திமுக மாவட்ட அவைத் தலைவர் எஸ்.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இந்த தொகுதியில் ஒரு தொழிலா ளியை, ஒரு பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த எல்.சுந்தரராஜை வேட்பாள ராக இந்த கூட்டணி நிறுத்தியிருக் கிறது. அவரை வீதி வீதியாக அழைத்துச் சென்று இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அதேபோல் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 8,000 ரூபாய் கூப்பன் என்பது இந்தியாவில் யாருமே அறிவிக்காத ஒரு திட்டம். அதை அனைத்து பகுதி மக்களிடமும் எடுத்துக் கூற வேண்டும். இங்கு எல்.சுந்தரராஜை வேட்பாளராக தலை வர் மு.க.ஸ்டாலின் நிறுத்தியிருக்கி றார். இவர் நம்மில் ஒருவர். இங்கே வேட்பாளர் பெயர் வேண்டுமானால் எல்.சுந்தரராஜ் ஆக இருக்கலாம், ஆனால் நிற்கும் வேட்பாளர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதரால் அடையாளம் காட்டப்பட்டவர். திமுக வேட்பாளர் நின்றால் எந்த அளவுக்கு உழைப்பீர்களோ, அதை விட அதிகமாக உழைத்து சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.