tamilnadu

img

வக்பு வாரிய திருத்த மசோதாவை முறியடிப்போம்! - சு.வெங்கடேசன் எம்.பி

வக்பு வாரிய திருத்த மசோதாவை முறியடிப்போம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு. ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைய இரண்டு மாத காலமாக உழைத்திட்ட எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன். தற்போது துவக்க விழா நடைபெற இருக்கிறது. ஆனால் அது துவங்குவதற்கு முன்பாக தில்லி நோக்கி பயணிக்கிறேன். 
மோடி அரசு நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்து இன்றே நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. நம்முடைய லட்சியங்கள் நம்முடைய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய உரிமைகளுக்கு நாமன்றி யார் நிற்பது? வக்பு வாரிய திருத்த மசோதாவை முறியடிப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.