சிபிஎம் கோவை மாமன்றக்குழுத் தலைவர் வி. ராமமூர்த்தி பேச்சு
கோயம்புத்தூர், பிப். 7 - கோயம்புத்தூர் மாநகராட்சியில், 100 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப் பட்டுள்ள சொத்துவரியைக் குறைக் கும் வரை போராட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாமன்றக்குழுத் தலை வர் வி. ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். சொத்துவரி உயர்வுக்கு எதிராக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள், கோவை மேயரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, சிபிஎம் மாமன்றக்குழுத் தலைவர் வி. ராம மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இங்கு போராடும் கட்சிகள் அனைத்துமே திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் தான் இருக் கிறோம். எனினும், மக்களின் பிரச்சனை என வரும்போது மக்களோடு நிற் கிறோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு வலியுறுத்தும் போராட்டம்.
எதிர்ப்பை மீறி வரி உயர்வு
கடந்த 11.4.22 அன்று முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலை மையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாநில அர சின் அரசாணை என்று சொல்லி, சொத்து வரி 100 சதவிகிதம் உயர்த்தப் படுவதாக கூறினார்கள். அப்போது நாங்கள் 22 வார்டுகளின் உறுப்பி னர்கள் இரவு 9.50 வரை போராடி னோம். 100 சதவிகித உயர்வு தேவை யில்லை, 50 சதவீதம் வரி உயர்த்தி னால் போதும் என கூறினோம். மாநில அரசு அரசாணையை எவ்வாறு மீறு வது என ஆளுங்கட்சி உறுப்பி னர்கள் மற்றும் மேயருக்கு தயக்கம் இருந்தது. ஆகவே எங்களின் எதிர்ப்பை மீறி 100 சதவிகிதம் சொத்து வரி உயர்வை நிறைவேற்றி னார்கள்.
கவுன்சிலர்களின் உரிமை பறிப்பு
மாநகராட்சி வருவாய் மற்றும் வரி உயர்வை முடிவு செய்வது மாமன்ற கவுன்சிலர்களான எங்களுடைய உரிமை. மாநில அரசு 100 சதவிகித வரி உயர்வை அறிவித்தாலும், அதனைக் கவுன்சிலர்கள் 70 சத விகிதம், 50 சதவிகிதம், 20 அல்லது 10 சதவிகிதம் என குறைக்க முடியும். அந்த உரிமை பறிக்கப்பட்டு, 100 சத விகித வரி உயர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 2024-இல் ஏற்கெ னவே உயர்த்தப்பட்ட 100 சதவிகித சொத்து வரியில் இருந்து, கூடுத லாக ஆண்டுக்கு 6 சதவிகித வரி உயர்வு கொண்டுவரப்பட்டது. கடந்த 2 கூட்டங்களிலும் இதுகுறித்து பேசினோம், கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது அமைச்ச ரிடம் கலந்து பேசி குறைக்கலாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை பேசவில்லை. அந்த வரி யையும் குறைக்கவில்லை.
டிரோன் சர்வே சரியானதல்ல!
அடுத்ததாக டிரோன் சர்வே முறையை கொண்டு வந்துள்ளனர். எதற்காக டிரோன் சர்வே? இங்கேயே, படித்த பொறியாளர்கள், நில அளவை அதிகாரிகள் உள்ளனர். ஆனால், தற்போது தவறாக சர்வே எடுத்துள்ளனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர். அதில் மோச மான விஷயம், ஜிஎஸ்டி வரி செலுத்து வோர். வீட்டில் ஒரு சிறிய வீடும், அதில் சிறிய பகுதியை கடைக்கு கொடுத்துள்ளனர். அதற்கு வணிக இணைப்பு கொடுக்கப்படுகிறது. அவ்வாறு மாற்றிய போது தான் காந்திபுரத்தில் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் வரி வந்துள்ளது. சம்பந்தப் பட்ட வரி வசூலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரடு முரடான வரி உயர்வு
இவ்வாறு மாநகராட்சியில் கரடு முரடாக வரி உயர்வை செய்கின்ற னர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தான் நாங்கள் கூட்டணிக் கட்சியாக இருந்த போதும், கொள்கையில் பல ஒற்றுமையோடு செயல்பட்ட போ தும், மக்களை பாதிக்கக் கூடிய பிரச்சனைகளில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை எங்க ளுக்கு உள்ளது என்ற அடிப்படை யில் தற்போது எதிப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். தொ டர்ந்து காந்தி சிலை முன்பும் சபதம் எடுத்துள்ளோம்.
போராட்டம் முடியாது
இந்தப் போராட்டம் இக்கூட்டத் தோடு முடியாது. தொடர்ந்து சபைக்கு வெளியேயும் போராட் டங்கள் தொடரும். கூட்டணி கட்சியின ரான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக மற்றும் வணிகர்களையும் இணைத்துக் கொண்டு, வரி உயர்வுக்கு எதிராக போராட்டத்தை நோக்கி அல்லது முறையீட்டை நோக்கிச் செல்வதை தவிர வழியில்லை. மாநகராட்சி ஆணையாளர் மக்களின் பாதிப்பை தெரிந்து கொள்ளாமல், வரியை உயர்த்தி கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பிரஞ்சு நிறு வனத்தின் சூயஸ் குடிநீர் திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம், இன்றும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அப்போது தற்போதைய திமுக வும் எங்களுடன் சூயஸை எதிர்த்து நின்றதை நினைவுபடுத்துகிறேன். நாங்கள் கூட்டணி கட்சியில் இருந்தா லும், வரி உயர்வு செய்யப்பட்ட போது எதிர்ப்பு தெரிவித்தோம். உடலு ழைப்பு தொழிலாளர்களின் பணி யிடங்களுக்கு மூடு விழா போட்ட போதும் போராடியுள்ளோம். ஒப்பந்ததாரர்கள் கொள்ளை தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கணினி ஆப ரேட்டர்கள் உள்ளிட்ட தொழிலாளர் களுக்காக மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் ஊதியத்தில் 40 சத விகிதம் ஒப்பந்ததாரர்கள் லாப நோக்கிற்கு பிடித்தம் செய்து கொள்வதை நாங்கள் ஏற்கவில்லை. மேலும் தொடர்ந்து மக்கள் பிரச்ச னைக்காக போராடுவோம். கூட்டணி கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரச்சனை என வரும்போது மக்க ளோடு தான் நிற்போம். இவ்வாறு வி. ராமமூர்த்தி தெரி வித்தார்.