சிறுமிகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் அ.ராதிகா, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாண வர்கள் 7 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது. சமீப நாட்களாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதி கரித்து வருவதையும், அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக அரசுக்கு தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறது. மேற்கண்ட சம்பவத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. உடனடியாக வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட உரிய சட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பாது காப்பை உத்தரவாதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சிறுமிக்கு மனரீதியா கவும் உடல் ரீதியாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் ஆற்றுப்படுத்துதல் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். சிறுமி யின் கண்ணியமான, சுதந்திர வாழ்க்கையை உறுதிப்படுத்த சிறுமியின் விருப்ப அடிப்படையில், கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துகிறோம். தமிழக அரசின் சார்பில் சிறுமிக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களை துரிதமாக விசாரணை நடத்துவதற்கு, மாவட்ட அளவில் குழந்தைகள் நல அலுவலர் களுக்கு பயிற்சி அளித்து வன்முறைகளை தடுத்து நிறுத்த சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இச்சூழலில், தமிழக குழந்தை கள் ஆணையத்திற்கு தலைவர் இல்லாதது, ஏற்புடை யது அல்ல. உடனடியாக தமிழக அரசு குழந்தைகள் நல ஆணையத்திற்கு தலைவரை நியமித்திட வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் களை பொதுமக்களிடையே அரசின் சார்பில் நடத்த வேண்டும்.
பள்ளி-கல்லூரி பாடத் திட்டங்களில்...
பாலின சமத்துவ கல்வி இடம்பெறுவதை உத்தர வாதப்படுத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தும் சட்டங்கள் குறித்து பாடத்திட்டங்களில் இணைத்திட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அவ்வப்போது பாலின சமத்துவம், பெண்கள்-குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு கருத்தரங்கங்களை நடத்த வேண்டும். மாவட்ட அளவில் பெண்கள் அமைப்புகள் உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையி லான குழு அமைத்து, பெண்கள்-குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில், அமைச் சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கொண்ட பெண்கள்-குழந்தை கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தும் கண்காணிப்பு குழுவைச் செயல்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.