இந்து தெய்வங்களை போற்றும் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாம்!
மோடி அரசு உத்தரவு புதுதில்லி, பிப். 11 - ‘வந்தே மாதரம்’ பாடல், 1875-ஆம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இடம்பெற்ற ஒன்றாகும். சமஸ்கிருதம் கலந்த வங்க மொழிப் பாடலான இதில், தாய் நாட்டை வணங்குவதை மையப்படுத்திய வரிகள் இருந்தாலும், இந்து தெய்வங்களின் பெயர்களும் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். இதனால், பல மதங்களை கொண்ட இந்த நாட்டில் அனைவருக்கும் பொதுவானதாக இந்தப் பாடல் இருக்காது என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கூறியதால், 1937-ஆம் ஆண்டு அந்த பாட லில் 4 பத்திகள் நீக்கப்பட்டு, 2 பத்திகள் மட்டும் பாடப்பட்டு வந்தது. ஆனால் இந்து மத தெய்வங்களை போற்றிப்பாடும் 4 பத்திகளை சேர்த்து, மொத்தம் 6 பத்திகளையும் (3.10 நிமிடங்கள்) முழுமையாக பாடுவது அல்லது இசைப்பது கட்டாயம் என்று மோடி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.