மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (வெள்ளிக் கிழமை) மாலை தொடர்ந்து மூன்று மணி நேரம் கனமழை பெயத்தது. சனிக்கிழமை காலைஎட்டு மணி நிலவரப்பட்டி 135.2மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.வெள்ளிக்கிழமை மாலை நான்குமணிக்கு பெய்யத் தொடங்கிய மாலை இரவு ஏழு மணிவரை நீடித்தது.
உசிலம்பட்டி மட்டுமல்லாது உத்தப்ப நாயக்கணூர், தொட்டப்ப நாயக்கணூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.இதுபோன்றதொரு தொடர்மழையை நாங்கள் பார்த்ததில்ல் என உசிலம்பட்டி மக்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை காலை எட்டு மணி நிலவரப்பட்டி 135.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது தமிழகத்திலேயே அதிகபட்சமான மழைப்பதிவு.இந்த மழையால் உசிலம்பட்டில் 13-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்குடியிருப்போர் அவதிக்குள்ளாகினர்.
நகரின் பல பகுதிகல்ம் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாராமல் இருந்ததன் காரணமாக ஆங் காங்கே மழை நீர் கழிவு நீருடன்கலந்தோடி மக்களை துன்பத்திற் குள்ளாக்கியது.தொடர்மலையால் இங்குள்ளஉசிலம்பட்டி அருகே வெள்ளமலையிலிருந்து கொட்டியதண்ணீர் வெள்ளமலைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையைத் தாண்டி ஊருக்குள் புகுந் தது. பொதுவாக இந்த மழைநீர் வெள்ளமலைப்பட்டி பகுதியில் செல்லும் வாய்க்கால் வழியாக கீரிப்பட்டிக்கு செல்லும். ஆனால்தண்ணீர் போக்கின் திசைமாறி வெள்ளமலைப்பட்டி கிராம விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் கத்திரி, வெண்டை,வாழை, பூச்செடி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.