tamilnadu

img

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வரி மிரட்டலுக்கு கண்டனம் தமிழகத்தின் தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வரி மிரட்டலுக்கு கண்டனம் தமிழகத்தின் தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜன. 22 - இந்தியப் பொருட்கள் மீதான வரியை 500 சதவிகிதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்துள்ள மிரட்டலைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள முக்கியமான 10 தொழில் நகரங் களில் இடதுசாரிக் கட்சிகள்  வியாழனன்று (ஜன.22) ஆவேச ஆர்ப்பாட்டம் நடத்தின. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துடன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டில் 50 சதவிகிதம் வரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நூல் மற்றும் ஆடைகளுக்கும் இரட்டிப்பாக வரி உயர்த்தப்பட்டது. இதனால் தமிழ கத்தில் பல்வேறு தொழில் துறை களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளன. குறிப்பாக ஆயத்த ஆடை ஏற்று மதியில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ள தாக ஜவுளித் துறையினர் கூறு கின்றனர். இந்நிலையில் தான், இந்திய தயாரிப்புகள் மீதான வரியை 500 சதவிகிதம் வரை உயர்த்தும் மசோதா வுக்கு ஒப்புதல் அளித்து, டிரம்ப் அடுத்த மிரட்டலில் இறங்கியுள்ளார். இது அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமலுக்கு வந்தால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்று மதி கடும் சிக்கலுக்கு உள்ளாகும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  தற்போதுள்ள நிலை நீடித்தாலோ  அல்லது வரி மேலும் உயர்த்தப் பட்டாலோ இங்குள்ள நிறுவனங் கள் இலங்கை உள்ளிட்ட பிற நாடு களுக்கு இடம் பெயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜவுளித்தொழில் அமைப்பினர் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி பாசுமதி அரிசி, தேயிலை, சர்க்கரை, பழவகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதித்து,  வேளாண்மை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத் தை ஏற்படுத்தும் சூழல் எழுந்துள்ளது. எனவே, அமெரிக்காவின் இந்த  வரி பயங்கரவாதத்தைக் கண்டித்து  வியாழக்கிழமை (ஜன. 22) தமி ழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், விருது நகர், தூத்துக்குடி ஆகிய 10 தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.  சென்னை தங்கசாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீர பாண்டியன், சிபிஐ(எம்-எல்-லிபரே சன்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.  வடசென்னை மாவட்டச் செயலா ளர் எம். ராமகிருஷ்ணன், தென்சென் னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் வேம்புலி வெங்கடேசன், சிவா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.