இந்தியா “கவலையளிக்கும் நாடு” மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் மீண்டும் அறிக்கை
வாஷிங்டன் மோடி பிரதமர் ஆன பின்பு, நாட்டில் முஸ்லிம், கிறிஸ்த வர்கள் உள்ளிட்ட சிறுபான்மை யினர் மீதான தாக்குதல் தீவிர மாகி உள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்து வா அமைப்புகள் இந்த தாக்குத லில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய மற்றும் பாஜக ஆளும் மாநில அர சுகளும் புல்டோசர் நடவடிக்கை மூலம் சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதலை முக்கிய வேலையாக செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலால், இந்தியாவை “கவ லையளிக்கும் நாடாக” அடை யாளப்படுத்த வேண்டும் என மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) 6ஆவது முறையாக குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் விக்கி ஹார்ட்ஸ்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்தியாவில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து, இந்துத்துவா கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைத் தாக்கு தல்கள் கவலை அளிக்கிறது. ஒடிசா வில் ஒரு மத போதகர் (கிறிஸ்தவர்) மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டாய மதமாற் றம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலால் (இந்துத்துவா) அவர் தாக்கப்பட்டார். கழுத்தில் காலணி மாலையுடன் வீதிகளில் ஊர்வல மாக அழைத்துச் செல்லப்பட்டார். இது மிகவும் கொடூரமான சம்பவம் ஆகும். குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் கிறிஸ்த வர்களுக்கு எதிரான பயங்கரமான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இந்தியாவில் மத சிறுபான்மையினரை குறிவைத்து அழிவு, துன்புறுத்தல் மற்றும் நாச வேலைகள் மட்டும் அதிகரிக்கிறது. அதனால் இந்தியாவை “கவலை யளிக்கும் நாடாக (Country of Particular Concern - CPC)” அறிவிக்க வேண்டும். மேலும் வன் முறையில் ஈடுபடும் இந்துத்துவா கும்பல்களை பொறுப்பேற்கச் செய்து, அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க இந்திய அரசினை, அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
