இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
இராமநாதபுரம், பிப்.7- இராமநாதபுரம் மாவட் டத்தில் அனைத்து தொழிற் சங்க, விவசாய சங்கம் சார் பில் பிப்ரவரி 12ல் நடக்கும் பொதுவேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தை விளக்கி மக்கள் சந்திப்பு வேன் பிரச்சார பயணம் வியாழக்கிழமை இராம நாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது நாள் பர மக்குடி, பார்த்திபனூர், அபி ராமம், கமுதி, முதுகுளத் தூர், கடலாடி, சிக்கல், ஏர் வாடி, இராமநாதபுரம், கேணிக்கரை, இறுதியாக அரண்மனையில் நிறைவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை தாங்கினார். இந்த பய ணத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சிவாஜி, ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் எம்.கே.ராஜன், சுப்பிர மணி, யூடியூசி மாவட்டச் செயலாளர் பன்னீர்செல் வம், சிபிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் கருணா நிதி, மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, மாவட்டச் செயலாளர் வி.மயில்வாக ணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். போஸ், ஆகியோர் மறி யலை விளக்கி உரையாற்றி னர். எல்.பி.எப் மாவட்டச் செயலாளர் ந.மலைக் கண்ணு நிறைவுரையாற்றி னார்.
