அரசாணை எண் 5-ஐ அமல்படுத்தக் கோரி மதுரையில் பேராசிரியர்கள் சாலை மறியல்
மதுரை, பிப்.7- தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய சட்டப்படி யான பணிமேம்பாட்டு ஊதி யத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பல்க லைக்கழக ஆசிரியர்கள் சங் கம் (ஏயூடி) மற்றும் மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்க லைக்கழக ஆசிரியர்கள் சங் கம் (மூட்டா) ஆகிய அமை ப்புகளின் சார்பில் மதுரை யில் மாபெரும் சாலை மறி யல் போராட்டம் நடைபெற் றது. மதுரை குரு தியேட்டர் பைபாஸ் சாலையில் நடை பெற்ற இந்த மறியல் போரா ட்டத்திற்கு, மூட்டா மாவட்ட உதவி தலைவர் உமா மகே ஸ்வரி தலைமை தாங்கி னார். இந்த மறியல் போராட் டத்தில் ஏயூடி பொதுச்செய லாளர் சேவியர் செல்வ குமார், மூட்டா தலைவர் பெரி யசாமிராஜா, பொதுச்செய லாளர் செந்தாமரைக்கண் ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரை யாற்றினர். போராட்டத்தை வாழ்த்தி, மூட்டா முன்னாள் நிர்வாகிகள் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் டான் சாக் நாககிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். பின்னர் மறியல் போரா ட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர்களை காவல் துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்ட பத்தில் அடைத்தனர்.
