tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கர்ப்பிணியான சிறுமி: போக்சோ வழக்குப் பதிவு

திருவில்லிபுத்தூர், பிப்.7- திருமணம் செய்து சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளை ஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்  பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வரும் ஜானகி என்பவ ருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவில்லி புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் பிப்.5 ஆம் தேதி விசாரணை  மேற்கொள்ளப்பட்டது. அப்போது வ.புதுப்பட்டியைச் சேர்ந்த அந்த சிறுமி,  அதே ஊரைச் சேர்ந்த தனது அத்தை மகன் தங்கேஸ்வரனு டன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக  மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இருவரின் வீட்டாரும் இதற்கு சம்மதிக்காத நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தி வந்ததாக வும், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் சிறுமி  கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி சிகிச்சைக்காக திருவில்லி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், விரிவாக்க அலு வலர் ஜானகி அளித்த புகாரின் பேரில், சிறுமியை திரு மணம் செய்து கர்ப்பிணியாக்கிய தங்கேஸ்வரன் மீது திரு வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல் விடுத்த  மூவர் மீது வழக்குப் பதிவு

திருவில்லிபுத்தூர், பிப்.7- திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பானாங்குளம் பகுதி யில், வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும்  பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நடந்து சென்ற  நபரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பானாங்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ப வர் புதன்கிழமை அப்பகுதியில் நடந்து சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த அய்யனார், அவரது மனைவி முத்து  மற்றும் மகன் அஜித்குமார் ஆகிய மூவரும் அவரை வழி மறித்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்  பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பள்ளியில் ரூ.76 ஆயிரம் திருட்டு: முதல்வர் காவல்துறையில் புகார்

திருவில்லிபுத்தூர், பிப்.7- திருவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் அலு வலக அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் காவல்துறை யில் புகார் அளித்துள்ளார். திருவில்லிபுத்தூரிலிருந்து மல்லி செல்லும் சாலையில்  தைலா குளம் அருகே அமைந்துள்ள அரிமா இண்டர் நேஷனல் பள்ளியில், பிப்.4-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி பணிகள் முடிந்த பின்னர், பணியாளர் தங்கமணி அலுவலக அறை மற்றும் ரெக்கார்டு அறையை பூட்டி, சாவியை காவலர் குருநாதனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் பிப்.5 ஆம் தேதி காலை, பள்ளியின் கணக்காளர் செல்வலட்சுமி அலுவலக அறையின் கதவை திறக்க வந்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டுள்ளார். தொடர்ந்து அறைக்குள் சென்று பார்வையிட்ட போது, கட்டுமான பணிகளுக்காக வைக்கப்  பட்டிருந்த ரூ.20,000 மற்றும் ரெக்கார்டு அறையில் வைத்தி ருந்த ரூ.56,000 என மொத்தம் ரூ.76,000 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரி விக்கப்பட்ட நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில்  பள்ளி முதல்வர் சிவக்குமார், பள்ளியின் சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கொண்டு, பள்ளி முதல்வர் சிவக்  குமார் மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் மல்லி காவல்நிலைய போலீசார் வழக்குப்  பதிவு செய்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இராஜபாளையம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

இராஜபாளையம், பிப்.7- இராஜபாளையம் வட்டம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று, வட்டார  சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு  துறைகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இராஜபாளையம் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் சத்துணவு தொடர்பான  கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. இக்கண்காட்சியை முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வ முடன் பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இராஜபாளையம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம் தலை மையில், மேற்பார்வையாளர் சாந்தி முன்னிலையில், அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கண்காட்சியில் சத்துமாவில் தயாரிக்கப்பட்ட கொழுக் கட்டை அனைவரையும் கவர்ந்தது. மேலும், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் குறித்த விளக்கங்களும், அவை உடல்நலத்திற்கு தரும் நன்மைகள் பற்றிய தகவல்களும் பொதுமக்களுக்கு பணியாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் குமராபுரத்தில் மருத்துவ முகாம்

விருதுநகர், பிப்.7- விருதுநகர் ஒன்றியம்,  கன்னிசேரி புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது குமராபுரம் கிரா மம். இங்கு  500க்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர்.   இங்குள்ள  ஆழ்துளைக் கிணறு   மூலம்   தண்ணீரானது,   30ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டிக்கு ஏற்றப்பட்டு. அங்கிருந்து   வீடு களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.   இந்நிலையில், நிலத்தடி நீரில்  சுண்  ணாம்பு  மற்றும் உப்புத்தன்மை  அதிகமாகி யுள்ளது. இதனால், ஒரு சில ஆண்டுகளில் மட் டும் 30 க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். 8 பேர்    உயிரிழந்திருந்தனர்.  பலர் சிறுநீரகம் பாதிக்  கப்பட்டு  மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்ஆ.குருசாமி, சமூக ஆர்வலர் எம்.ஊர்காவலன் ஆகியோர்  தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெயபாரத், விருதுநகர் தெற்கு ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே. ஆரோக்கியராஜ், குமார் ஆகியோர் நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக மருத்துவ சிகிச்சை முகாம் நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து அங்கு மருத்துமுகாம் நடை பெற்றது. 12 பேர் சிகிச்சை பெற்றனர். இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பி. நேரு, ஒன்றியகுழு உறுப்பினர் குமார், முரு கன், விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

சிறுமியை திருமணம் செய்து  கர்ப்பம் ஆக்கியவர் மீது போக்சோ வழக்கு

திருவில்லிபுத்தூர், பிப்.7- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வரும்  மாரியம்மாள் என்பவருக்கு, பிப்.5-ஆம் தேதி கிடைத்த தகவலின் பேரில், அவர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த சிறுமி, தனது பெற்றோர் இறந்து விட்டதால் ஆண்டிபட்டியில் வசிக்கும் சித்தியின்  வீட்டில் தங்கி, ஆறாம் வகுப்பு வரை படித்துவந்ததாக வும், அதன் பின்னர் வீட்டு வேலை செய்து வந்ததாக வும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருவில்லி புத்தூர் இடைய பொட்டல் தெருவைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர், ஆண்டிபட்டியில் கொத்தனார் வேலைக்குச் சென்றபோது சிறுமியுடன் பழக்கம்  ஏற்பட்டதாகவும், அது பின்னர் காதலாக மாறியதாக வும் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2025 புத்தாண்டு தினத் தன்று இசக்கிமுத்து, சிறுமியை திருமணம் செய்து  கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அதன் விளைவாக தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணி யாக இருந்த நிலையில், ரத்த அழுத்தம் அதி கரித்ததால் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரி வித்தார். இந்த தகவலின் அடிப்படையில், சிறுமியை திரு மணம் செய்து கர்ப்பம் ஆக்கியதாக, இசக்கிமுத்து மீது திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரிவாக்க அலுவலர் மாரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார்.

பெரியகுளம் அருகே  கஞ்சா கடத்திய பெண் கைது 25 கிலோ பறிமுதல்

தேனி,பிப்.7- பெரியகுளம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர்.  பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எ.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மது விலக்கு காவல்துறையினர் சந்தேகத்திற்கு இணங்க பெண்ணை சோதனை செய்தனர்.  அப்போது அவரிடமிருந்து அரசால் தடை செய்யப் பட்ட 24.590 கிலோ எடையுள்ள கஞ்சா பண்டல் பண்டலாக  இருப்பது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணை கைது செய்த தேனி மதுவிலக்கு போலீ சார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை  நடத்தினர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முருகேஸ்வரி (53) என்பதும், இவர் ஆந்திர மாநி லம் சென்று அங்கு கேரளாவைச் சேர்ந்த குன்னிப்பா என்ப வரிடம் ரூ40 ஆயிரத்திற்கு 25 கிலோ கஞ்சா வாங்கியது தெரியவந்தது. மேலும் அவற்றை தேனி மாவட்டத்தில் சில்லறை விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகேஸ்வரி, குன்னிப்பா என இரு வர் மீதும் வழக்குப் பதிந்த தேனி மதுவிலக்கு போலீசார்,  முருகேஸ்வரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் கஞ்சா சப்ளை செய்த குன்னிப்பாவை தீவிரமாக  தேடி வருகின்றனர். கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி திடீர் ஆய்வு தேனி, பிப்.7- தமிழ்நாடு -கேரளா எல்லையான கம்பம் மெட்டு சோத னைச் சாவடியில் திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர்  சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.  தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் பகுதியாக  போடிமெட்டு, குமுளி, கம்பம்  மெட்டு  இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் கேரள காவல், வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு கஞ்சா, ரேசன் அரிசி கடத்தல் ,கனிமவளங்கள் , கேரளா வில் இருந்து  தமிழகத்திற்கு இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிரமாக   கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திண்டுக்கல்  சரக டி.ஐ.ஜி சாமிநாதன்,தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்  சினேஹா பிரியா ஆகியோர் கம்பம்மெட்டில்  உள்ள தமிழக காவல்  மற்றும் வனத்துறை  சோதனைச்  சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதுகுறித்து போலீசார்  கூறுகையில், வருகின்ற 2026  சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக கேரள எல்லைப்  பாதுகாப்பு சம்பந்தமாக இரு மாநில போலீஸ் அதிகாரி கள்  ஆலோசனை கூட்டம் கேரள மாநிலம் தேக்கடியில்  ராஜீவ் காந்தி அரங்கத்தில் நடைபெற்றது.இதனை தொட ர்ந்து குமுளி, கம்பம் மெட்டில் உள்ள போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகளில்  அடிப்படை வசதி கள், சிசிசிடி கேமிரா , வருகை பதிவேட்டை ஆய்வு செய்த தாக  தெரிவித்தனர்.

 சிறுமியை வன்புணர்வு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை  தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு  

தேனி, பிப்.6- சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனை  விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் காணிக்கை ராஜ்  (66)  என்ற முதியவர்.இவர் 2022 ஆம் ஆண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பத்து வயது சிறுமியை  அழைத்  துச் சென்று  வன்புணர்வில்  ஈடுபட்டதாக சிறுமியின் பெற்  றோர் பெரியகுளம் தெற்கரை காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்று முதியவர் காணிக்கை ராஜ்  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம்  ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால்  மேலும் ஒரு வருட கடுங்காவல்  சிறை தண்டனை விதித்து  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பளித்  தார். மேலும் சிறுமியின்  கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்  காக தமிழக அரசு 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்  பிட்டுள்ளார்.

இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை மையம்

சிவகங்கை, பிப்.7- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில், வைகை ஆற்றங்கரையோரம் குலாலர் தெருவில் இயற்கை  விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து  பொருட்களும் முழுமையாக இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை என, கடையின் உரிமையாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.  இயற்கை விவசாயப் பொருட்களை விரும்பும் பொது மக்கள் மற்றும் ஆரோக்கிய உணவு தேடும் நுகர்வோரி டையே இந்த விற்பனை மையம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

க.விலக்கில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி

தேனி, பிப்.7- ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதி யில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்  கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயி ரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கார்  ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி–மதுரை, வருசநாடு மற்றும் வைகை அணை செல்லும் சாலைகள் சந்  திக்கும் க.விலக்கு நாற்சந்திப்பு பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப்  போக்குவரத்தும் மிகுந்த பகுதியாக உள்  ளது. இந்நிலையில் க.விலக்கு சந்திப்பில்  உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக் கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நாராயண சடனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், தேனியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்தது. க.விலக்கு நாற்  சந்திப்பு அருகே வந்தபோது கட்டுப் பாட்டை இழந்த கார், சாலையில் அமைக்  கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள் மீது  மோதி, தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கர சத்தத்து டன் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை க.விலக்கு போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பினர். ஆனால் கண்டம னூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ்  (75), செல்வம் (50) மற்றும் ஏரதிமக்காள் பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய  மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் அரசரடியைச் சேர்ந்த பாக்கி யலட்சுமி (39) என்பவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய அஜித்குமாரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள்  3 பேர் மலேசியாவிற்கு கல்விச்சுற்றுலா

மதுரை, பிப்.7- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா மற்றும் மன்றப் போட்டி கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டி களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்க ளைப் பெறும் மாணவர்கள் அரசு செல வில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவது சிறப்பம்ச மாகும். அந்த வகையில், கடந்த கல்வியாண் டில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மூவர், மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவாக பிப்.9 ஆம்  தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர். மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  மாணவி எம்.சாருலதா (தற்போது 8-ஆம்  வகுப்பு) கவிதை எழுதும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.அமித்தா கதை சொல்லும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து  சாதனை புரிந்துள்ளார். மேலும், மேலூர்  அருகே குறிச்சிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி யைச் சேர்ந்த மாணவன் ஜி.பாலாஜி, வான வில் மன்றப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இந்த மூன்று மாணவர்களும் பிப்.9- ஆம் தேதி சென்னை விமான நிலையத்தி லிருந்து மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்று லாவிற்காக புறப்பட உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வெளிநாட்டு கல்விச் சுற்றுலா செல்லும் இந்த நிகழ்வு, பிற மாண வர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

உணவகத்திற்கு தடை விதிக்க பரிந்துரை

விருதுநகர், பிப்.7- விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் உள்ள பயண வழி உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்ப னைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து, அப்பொருட்களை பறிமுதல் செய்ததோடு, உணவகத்தில் பேருந்துகளை நிறுத்திடத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலு வலர்  மாரியப்பன் தலைமையிலான  குழுவினர் 4 வழிச்  சாலையில்  ஆர்.ஆர்.நகர் அருகேயுள்ள துலுக்கபட்டி யில் உள்ள பயணவழி உணவகத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சமையலறை   சுகாதாரமற்றும், கழிவுநீரானது  உணவகத்தின் அருகே தேங்கிக் கிடந்ததும்,   மேற்கூரை  அழுக்கடைந்து,  சிலந்தி வலை யுடன் இருப்பதும்  கண்டறியப்பட்டது. மேலும், அந்த உணவகத்தில் தரமற்ற 5 கிலோ சிப்ஸ், 4 கிலோ முந்திரிக் குருணை, 1.5 கிலோ சோம்பு,  அரைக் கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழி ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.