tamilnadu

img

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி

மதுரை, பிப்.7- ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகளும் மக்களும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தல் மக்கள் நடமாடக்கூட முடியவில்லை.   மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஆரப்பாளை யம் பேருந்து நிலையம் பகுதியில் அரசு பேருந்துகள் மாட்டுத்தாவணி நோக்கி செல்லும் வழியில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியிலிருந்து வைகை காலனி வரை உள்ள சாலை மிகவும் மோச மான நிலையில்  உள்ளது. இதனை சீரமைக்குமாறு  பொதுமக்களும் அரசு பேருந்து ஓட்டுநர்களும் வலி யுறுத்தியுள்ளனர்.  இந்த பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதம டைந்து வாகனங்கள் இயக்குவதற்கே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  சாக்கடை கழிவுநீர் வெளி யேறி சாலைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவ தாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தினசரி ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாமல்  இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சி யத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்தனர். பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான உரிய கழிப்பிடம் இல்லாததால் சாலையோரங்களிலும் குடியிருப்புகளை ஒட்டியும் சிறுநீர் கழிக்கும் அவல நிலை உள்ளது.இதனால் அப்பகுதி முழுவதும் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பு வாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வீடுகளின் ஜன்னல்களை திறக்க முடியாத அளவிற்கு சுகாதா ரச்சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர். அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், தற்போது அரசு வழங்கியுள்ள புதிய பேருந்துகள் கூட இந்த சாலையில் இயக்கப்படும் போது விரை வில் பழுதடையும் அபாயம் உள்ளது.  இரவு நேரங்க ளில் சாலையில் உள்ள பள்ளங்களை காண முடியாமல் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது என்று  தெரிவித்தனர். பேருந்துகளும் பயணிகளும் பாதுகாப்பாக இருக்க இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே, சேதமடைந்த சாலைகளை உடனடி யாக சீரமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிரந்தர கழிப்பிடம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் அரசு பேருந்து ஓட்டு நர்களும் வலியுறுத்தியுள்ளனர்.