அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது
வாஷிங்டன், ஆக. 26 - இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவிகித வரி புதன்கிழமை (ஆக.27) முதல் அமலாகிறது. உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை நடத்திவரும் டிரம்ப், ஜூலை 30 அன்று இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வர்த்தக வரி விதித்தார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்று கூறி, மேலும் 25 சதவிகிதம் வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்களின் மீதான வரி 50 சதவிகிதமாக உயர்ந்தது. இதில், ஏற்கெனவே 25 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியும் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.