ஒன்றிய அரசே, தொழிலாளர், விவசாயிகள் விரோதக் கொள்கைகளை திரும்பப் பெறுக!
விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மறியல் - கைது
விருதுநகர், பிப்.12- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தொழி லாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவ சாயிகளுக்கு விரோதமான விதைச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இவற்றை எதிர்த்து அனைத்து சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் வியாழனன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தையொட்டி விருதுநகர், இராமநாதபுரம், சிவ கங்கை ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பேரணியாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட னர். விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் 17 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 801 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இப்போராட் டத்திற்கு எல்பிஎப் மண்டல பொதுச் செயலாளர் ராஜாசெல்வம் தலை மையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா துவக்கி வைத்தார். ஏஐடியுசி பாண்டியன், பாலமுருகன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் போஸ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தீபக்குமார், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, சிஐடியு நிர்வாகிகள் ஜி.வேலுச்சாமி, ஆர்.விஜய பாண்டி, வி.பாலமுருகன், எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் சிஐடியு கன்வீனர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை யில் ஏஐடியுசி -கூடலிங்கம், எல்பிஎப் தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் விளக்கிப் பேசினார். காரியாபட்டியில் சிஐடியு முகமது அலி ஜின்னா தலைமை யேற்றார். விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வி.முருகன், கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் ராமர், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ. அம்மாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சுழியில் சிஐடியு கன்வீனர் எம்.சுரேஷ்குமார் தலைமையில் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், விவசாய தொழிலா ளர் சங்க தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து விதொச மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டி யன் பேசினார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிர மணியன் விளக்கிப் பேசினார். சிபிஎம் வட்டச் செயலாளர் மார்க்கண் டன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏழாயிரம்பண்ணையில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் வி.சந்திரன் தலைமையில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் மனோபிரியா, ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூரில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில், பாண்டியன், நாகராஜன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஏஐடியுசி சார்பில் பழனிக்குமார், சாமிநாதன், எல்பிஎப் சார்பில் ஜெயபால், சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.சரோஜா, பாலசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் சிஐடியு கன்வீனர் பி.அன்புச்செல்வன் தலைமையேற்றார். எல்பிஎப் செல்வசுந்தரம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கார்மேகம் துவக்கி வைத்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் எஸ்.காத்தமுத்து, திருப்பதி, அங்கன் வாடி சங்கத்தின் சித்ரா, முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலவநத்தத்தில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எம்.சாராள் தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கணேசன் துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை விளக்கிப் பேசினார். ஜோதிபாசு, பழனிமுருகன், லீலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆமத்தூரில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வி.ஆர்.செல்லச்சாமி தலைமையில், மாநில துணைத் தலைவர் எம்.அசோ கன் துவக்கி வைத்தார். விதொச மாவட்டக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் என். உமாமகேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் தங்கேஸ்வரி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெம்பக்கோட்டையில் சிஐடியு பெரியசக்கரை தலைமை யேற்றார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துர்கா முன்னிலையில், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ் துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.மாரியப்பன் விளக்கிப் பேசினார். ஒன்றியச் செயலாளர் கே. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு எல்பிஎப் ஆசைத் தம்பி, சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் சோமசுந்தரம், மாநில குழு உறுப்பினர் முனி யாண்டி, ஏஐடியுசி - ஆர்.பி.முத்துமாரி, ஐஎன்டியுசி - ஆறுமுகநயி னார், எம்எல்எப் - பழனிச்சாமி, எல்எல்எப் - முத்துக்காந்தன் உள் ளிட்டோர் தலைமை தாங்கினர். இராஜபாளையம் நகர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு மாவட்ட உதவி தலைவர் கணேசன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ரவி, எச்எம்எஸ் மாநில பொதுச் செயலாளர் கண்ணன், ஐஎன்டியுசி மாநில பொருளாளர் பிரபாகரன், எல்எல்எப் - சரவணன், அங்கன்வாடி சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமலாராணி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, நகரச் செயலாளர் சுப்பிரமணி, சிஐடியு நிர்வாகிகள் முனியாண்டி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டியார்பட்டி யூனியன் வங்கி முன்பு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ராமர், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பகத்சிங், எம்எல்எப் மாநில தலைவர் காதர்மைதீன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம், மதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.எம்.மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன், வி.தொ.ச. மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மம்சாபுரம் பேரூராட்சியில் சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் சந்தனம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள் ஆகி யோர் தலைமை தாங்கினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் விருது நகர் மின் திட்டச் செயலாளர் ராஜாராம், விவசாய சங்க மாவட்டத் தலை வர் விஜயமுருகன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் அப்பாஸ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் நகரில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் திருமலை, எல்பிஎப் சார்பில் லிங்க ராஜ், ஏஐடியுசி சார்பில் சோமசுந்தரம், ஏஐசிசிடியு - வேதநாயகம் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட நிர்வாகி பிச்சைக்கனி, ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் வீரசதானந்தம், சிபிஎம் நகரச் செய லாளர் ஜெயக்குமார், சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு யூனியன் வங்கி முன்பு அங்கன்வாடி சங்கம் சார்பில் பவுன்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வி.தொ.ச. மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் பெனரி ஆகி யோர் பேசினர். முத்துக்கருப்பன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலை வர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, கடலாடி, சிக்கல், பரமக்குடி, முது குளத்தூர், கமுதி ஆகிய 9 இடங்களில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இராமநாதபுரத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தா னம் தலைமை நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ.குரு வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் ந.மலைக்கண்ணு, ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் எம்.கே.ராஜன், சுப்பிரமணி, யுடியுசி மாவட்டச் செயலாளர் பன் னீர்செல்வம், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.பாஸ்கரன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.அண்ணாதுரை, மாவட்டத் துணைச் செயலா ளர் க.தனுஷ்கோடி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 35 பெண்கள் உட்பட 116 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். கடலாடியில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். சிபிஐ விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கரு ணாநிதி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 52 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிக்கலில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி.மயில்வாகணன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க கிழக்கு தாலுகா தலை வர் எஸ்.ராமசாமி, செயலாளர் எம்.சுப்பிரமணி, சிஐடியு ஆட்டோ சங்க மத்தியக் குழு உறுப்பினர் வி.ஜெயக்குமார், உப்பு நிறுவன கிளைச் செயலாளர் முருகவேல், பொருளாளர் எம்.அற்புதமணி, எல்பிஎப் தமிழ்நாடு உப்பு நிறுவன கிளைச் செயலாளர் விக்னேஸ்வரன், தலை வர் தாவீத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 60 பேர் காவல்துறை யினர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூரில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முருகன், தாலுகா செயலாளர் பி.அங்குதன், தலை வர் என்.சண்முகையா, பொருளாளர் வி.முருகேசன், சிஐடியு மின் ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பூப்பாண்டி, போக்குவரத்து கிளைச் செயலாளர் திருமலை ஆகியோர் கண்டன உரையாற்றினர். 183 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கீழக்கரையில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். போஸ் தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் எம். கருப்புசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் எஸ்.முருகேசன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் டி.நம்புராஜன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 52 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இராமேஸ்வரத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சிவாஜி தலைமை வகித்தார். மீனவர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் த.ராமச்சந்திரபாபு, போக்குவரத்து மத்திய சங்க நிர்வாகி செல்ல குண்டு, மீன்பிடி தொழிற்சங்க உறுப்பினர் எஸ்.மகேஸ்வரி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆரோக்கிய நிர்மலா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுமதி, சிஐடியு மாவட்ட நிர்வாகி சின்னத்துரை, சாலையோர வியா பாரிகள் சங்க நிர்வாகி முருகன், மாரியப்பன், வியாபார சங்க நிர்வாகி முத்துப்பாண்டி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. மல்லிகா, வினோதினி ஆகியோர் உரையாற்றினர். பரமக்குடியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் தி.ராஜா தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.காசி நாததுரை, பரமக்குடி வட்டாரச் செயலாளர் இ.க.தட்சிணாமூர்த்தி, நகர் குழு செயலாளர் ஆர்.முனியசாமி, சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் முரளி, கைத்தறி சங்க நிர்வாகி மோதிலால், முறைசாரா சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.பசலை நாகராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கமுதியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் இரா.முத்துவிஜ யன் தலைமை வகித்தார். வாரச் சந்தை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆலடி ஈஸ்வரன், தாலுகாச் செயலாளர் ஜீவானந்தம், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமர், கண்ணதாசன் ஆகியோர் பேசினர். 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாடானையில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் அ. சுடலைகாசி, ஏஐடியுசி குருசாமி, இபிஎப் ஷாஜகான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிவகங்கை சிவகங்கையில் சிஐடியு மாவட்டத் தலைவர் உமாநாத் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராஜா, எல்பிஎப் பொறுப்பா ளர் முருகன் மற்றும் பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் மறியல் போராட்டத் தில் கலந்து கொண்டனர். காரைக்குடியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், மீனாள் சேது ராமன், காளைலிங்கம், சகாயம், கண்ணன், மணவழகன், விஜய சுந்தரம், பேரானந்தம், தாளைமுத்து, சீத்தாராமன், மோகன், உடையார், பரிசுத்த மங்களசாமி, குஞ்சரம் காசிநாதன், முருகன், ராம்ராஜ், பாண்டி, ராஜேஸ்வரி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அய் யம்பாண்டி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் தட்சிணாமூர்த்தி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மண்டல தலைவர் தெய்வீகபாண்டியன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயமங்கலம், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பாக்கியமேரி, உள்ளாட்சி அமைப்பின் மாவட்டச் செயலாளர் வேங்கையா, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முருகானந்தம், சுரேஷ், வேல்முருகன், கருப்புசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க காரைக்குடி மாநகர் தலைவர் சுப்பிரமணி, மாந கரச் செயலாளர் வெங்கட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
