ஒன்றிய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தி யாவின் மகன் மகா ஆர்யமன் சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். ஆர்யமன் சிந்தியா மத்தியப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலை வராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பி டத்தக்கது.
ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி தாக்கல் செய்த மனு தொடர்பாக, சிபிஐ பதிலளிக்கு மாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் மேலும் 2 கோடிப் பேருக்கு நோட்டீஸ்?
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐ ஆர்) பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. எஸ்ஐஆருக்கு முன்பு உத்தரப்பிர தேசத்தில் 15.44 கோடியாக இருந்த வாக் காளர்களின் எண்ணிக்கை, தற்போது 12.55 கோடியாகக் குறைந்துள்ளது. அதா வது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். மொத்த வாக்காளர் பட்டிய லில் 18.70% பேர் ஆகும். அலகாபாத்தில் 11.56 லட்சம், கான்பூ ரில் 9 லட்சம், ஆக்ராவில் 8.36 லட்சம், காசியாபாத்தில் 8.18 லட்சமாக வாக்கா ளர்கள் குறைந்துள்ளனர். தலைநகர் லக்னோவில் வாக்காளர் எண்ணிக்கை யில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர் என செய்திகள் வெளியா கியுள்ளன. மேலும் 2 கோடிப் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரப்பிரதேச தேர்தல் ஆணை யம் தயாராகி வருகிறது என கூறப்படு கிறது. இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 4 கோடி வாக்கா ளர்களை நீக்கும் திட்டத்தில் தேர்தல் ஆணையம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தில்லியில் தீ விபத்து 4 பேர் பலி
தெற்கு தில்லியின் கவுதம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க் கிழமை அதிகாலை சுமார் 2:30 மணி யளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்ட டத்தின் தரைத்தளத்தில் இருந்த மின்சார மீட்டர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரண மாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் (2 குழந்தை கள் உட்பட) மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்கியிருந்த சுமார் 10 பேரை பத்திரமாக மீட்டனர். தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய அஜய் விமல் (45) என்பவர் குடும்பத்தோடு தீ விபத்தில் இறந்துள்ளதாக காவல்துறை விசாரணை மூலம் செய்திகள் வெளியாகி யுள்ளன. காயமடைந்தவர்கள் (எண்ணிக் கை உறுதியாக தெரியவில்லை) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளனர்.