மாதர் சங்கத்தின் ஒன்றிய, நகர மாநாடுகள்
குடவாசல் நகர மாநாட்டில் மூத்த உறுப்பினர் ஜெயம் வெண்கொடியை ஏற்றினார்.
திருவாரூர், ஜூலை 6 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய, நகர மாநாடுகள் திருவா ரூர் மாவட்டத்தில் அமைப்பின் வெண்கொடி ஏற்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாதர் சங்கத்தின் மாநாட்டில் மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாவட்ட செயலாளர் பா.கோமதி மற்றும் மாவட்ட துணை நிர்வாகி கள், பொறுப்பாளர்கள் புதிய நிர்வாகிகளை அறிவித்து சிறப்புரையாற்றினர். திருவாரூர் நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில், தலைவராக கே.ஆரோக்கிய மேரி, செயலாராக வி.சுதா, பொருளாளராக இ.ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். திருத்துறைப்பூண்டி நகரத்தில் தலைவராக வெண்ணிலா, செயலாளராக கோதாவரி, பொருளாளராக சுதா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். முத்துப்பேட்டை நகரத்தில் தலைவராக சாந்தி, செயலாளராக மலர்விழி, பொருளா ளராக கண்ணகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நன்னிலம் ஒன்றியத்தில் தலைவராக தனம், செயலாளராக உமாராணி, பொரு ளாளராக பத்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். குடவாசல் ஒன்றியத்தில் தலைவராக சீதாலட்சுமி, செயலாளராக ஜெகதீஸ்வரி, பொருளாளராக மகாலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குடவாசல் நகரத்தில் தலைவராக ரா.சுந்தரி, செய லாளராக டி.ஜி. தமிழ்ச்செல்வி, பொருளாள ராக என்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். கோட்டூர் ஒன்றியத்தில் தலைவ ராக மாலதி, செயலாளராக சுபா, பொருளாள ராக பைந்தமிழ் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மூத்த பெண் உறுப்பினர்கள் அமைப்பின் வெண்கொடியை ஏற்றி உற்சாக மாக மாநாட்டை துவக்கி வைத்தனர்.