tamilnadu

img

காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பில் கீழடி அகழாய்வு எலும்பு மாதிரிகள்

மதுரை:
கீழடி தொல்பொருள் அகழாய்வில்கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகள் காமராஜா் பல்கலைக் கழக உயிரியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.சிவகங்கை மாவட்டம் கீழடியில்தொல்லியல் துறையால் மேற்கொள் ளப்பட்ட அகழாய்வில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் மற்றும் எலும்பு மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள்களின் பழமை குறித்து ஆய்வு நடத்த மதுரை காமராஜா் பல்கலைக் கழகமும், தமிழக தொல்லியல் துறையும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கூறியதாவது:

கீழடி அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட எலும்பு மாதிரிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு, அரசு ரூ.3 கோடிஒதுக்குவதாக அறிவித்தது. தற்போதுதொற்று பேரிடரால் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடக் கத்தால் ஆராய்ச்சி மாணவா்களும் வருவது இல்லை. இதனால் ஆய்வு தடைபட்டுள்ளது.அரசு அறிவித்த நிதியை விடுவிக்கும்பட்சத்தில் தான் ஆய்வகத்தைதயார் செய்யும் பணிகளைத் தொடங்கமுடியும். பல்கலைக்கழகம் திறக்கப் பட்டவுடன் ஆய்வு மாணவா்கள் மூலம்கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு தொல் தமிழர் களின் நாகரீகம், வாழ்க்கை முறை குறித்து தெரிவிக்கப்படும்.கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் தற்போது காமராஜா் பல்கலைக் கழகத்தில் உள்ள உயிரியல் துறை ஆய்வகத்தில் குளிர்சாதன வசதியோடு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றார்.