டி.வி., செல்போன் விலைகள் உயர்கின்றன
புதுதில்லி, ஜன.17- டி.வி., மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த இரண்டு மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளை வாக அவற்றின் விலை உயர்வு மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் என்று கூறப்படு கிறது. கடந்த அக்டோபர் மாதத் துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதன் காரணமாக டி.வி. மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான நெருக்கடி ஏற்க னவே தொடங்கி விட்டதாக வும் கூறப்படுகிறது.