tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கே.சி.வேணுகோபாலுக்கு சிபிஎம் நோட்டீஸ் கேரள மாநிலம் பையனூ ரில் உள்ள சிபிஎம் அலுவ லகத்தின் 3ஆவது மாடியில் போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப் படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலா ளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கேரள பிரதேச காங்கி ரஸ் கமிட்டி, மாநிலத் தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளித்தது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கண்ணூர் மாவட்ட ஆட்சியருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போலி ஆதார் அட்டைகள் தொடர்பாக சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளர் கே.கே.ராகேஷ் சார்பில் வழக்கறி ஞர் கே.விஸ்வம், கே.சி.வேணுகோபா லுக்கு,”இந்த தகவல் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக உளற வேண்டாம். ஆதாரங்களை வெளியி டுங்கள். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்” என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை 10ஆம் வகுப்பு வரை கட்டாயம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ), தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரை களின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் பணிக ளைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “முதற்கட்டமாக 2026-27 கல்வியாண்டில் 6ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். படிப் படியாக விரிவுபடுத்தப்பட்டு, 2030-31  கல்வியாண்டிற்குள் 10ஆம் வகுப்பு வரை முழுமையாகக் கட்டாயமாக்கப்படும். இதற்கான புதிய பாடத்திட்டக் கட்ட மைப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த முடிவின் மூலம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளி களில் இனி ஆங்கிலத்துடன் சேர்த்து, சமஸ்கிருதம், தமிழ், இந்தி அல்லது பிற பிராந்திய மொழிகளில் ஏதேனும் இரண்டை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி தன்னாட்சி அதிகாரம் பெற்றது என்சிஇஆர்டி ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவ னத்திற்கு (என்சிஇஆர்டி), பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) ‘நிகர் நிலைப் பல்கலைக்கழக’ அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஒன்றிய கல்வி அமைச் சர் தர்மேந்திர பிரதான், என்சிஇஆர்டி-யின் 63ஆவது நிறுவன தின விழாவின் போது இந்த  அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் என்சிஇஆர்டி இனி ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்க லைக்கழகமாகச் செயல்படும்.