tamilnadu

img

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆர்.நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆர்.நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி

திருப்பூர், பிப்.26- சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு புத னன்று காலமானார். இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொதுவுடமை இயக்க போராளி தோழர்  ஆர்.நல்லகண்ணுவிற்குத் தலைவர் கள் புகழ் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர்: திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகம் முன்பு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு வேலம்பாளையம் நகரச்  செயலாளர் ச.நந்தகோபால் தலைமை  ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி ஆகியோர் ஆர்.நல்லகண்ணு வின் பணிகளை நினைவு கூர்ந்து புக ழுரை ஆற்றினர். இதில் பங்கேற்ற பெருந்திரளானோர் மலரஞ்சலி செலுத் தினர். பல்லடம்: பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர். நல்லகண்ணு நினைவஞ்சலி கூட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் வை. பழனி சாமி தலைமை வகித்தார். முன்னாள்  கிராம நிர்வாக அலுவலர் மு.பாலசுப்பி ரமணியம், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பரமசிவம், எஸ்.பிர வீன் குமார் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர். அவிநாசி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் பகுதி கிளைகள் சார் பில் பேருந்து நிறுத்தம் அருகில் தோழர்  ஆர்.நல்லகண்ணுக்கு அஞ்சலி செலுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சி கிளைச் செயலாளர் ஹனிபா தலைமை  வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், சிஐடியு மாநி லக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, அதி முக ஜெகதீஷ், முருகேஷ், திமுக பிர காஷ், சிபிஎம் மூத்த உறுப்பினர் மிலிட் டரி பொன்னுச்சாமி, கட்சி கிளைச் செய லாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வடுகபாளையம் கிளை சார்பில் நடைபெற்ற அஞ்சலி  நிகழ்ச்சியில், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் கவுரிமணி, கட்சி கிளைச்செயலா ளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் அவி நாசியில் மதிமுகவினர், நல்லது நண்பர்  அறக்கட்டளை, மனிதம் அமைப்பு, சுமங்கலி ரெடிமேட்ஸ் உட்பட பலர் தோழர் ஆர்.என்.கே படம் வைத்து அஞ் சலி நிகழ்ச்சி நடத்தினர். சிபிஐ சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி: திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதி யில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில்  தோழர் ஆர்.நல்லகண்ணு அஞ்சலி நிகழ்ச்சிக்கு சிபிஐ முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் ஜி.ராமசாமி தலைமை  வகித்தார். கட்சியின் திருமுரு கன்பூண்டி நிர்வாகி நஞ்சப்பன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுரு கன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணியம், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  நிர்வாகி ஆறுமுகம், திமுக நகரச் செய லாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  உடுமலை: உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர். நல்லகண்ணுவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்க மிட்டி அலுவலகத்தில் நகரச் செயலா ளர் தண்டபாணி தலைமையிலும், மடத் துக்குளம் தாலுகா அலுவலகத்தில் கட்சி யின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் தலைமையில் நடைபெற்றது. இதில், பொது மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என திரளானோர் பங் கேற்று அஞ்சலி செலுத்தினர்.  வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் வியாழனன்று ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் வெள்ளகோவில் சிவநாதபுரம் கிளைச்  செயலாளர் லோகேஸ்வரன் தலை மையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச்  செயலாளர் சந்திரசேகர், நகர செயலா ளர் எஸ் .முருகானந்தம், மதிமுக நகர  செயலாளர் ஆர்.பி.ராம்குமார், திராவி டர் கழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், பகுத்தறிவாளர் கழகம் ஜெகநாதன், ஆதித்தமிழர் பேரவை சம்பூர்ணம், சிபி எம் தாலுகா குழு உறுப்பினர்கள் கருப்பு சாமி, சுப்பிரமணி உள்ளிட்டோர் உரை யாற்றினர். திரளானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.  மாமன்றத்தில் நல்லக்கண்ணு வுக்கு அஞ்சலி: திருப்பூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுதந்திரப் போராட்ட வீரர், முது பெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்  ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அனைத்து கட்சியின ரும் அவரை நினைவு கூர்ந்து புகழுரை  ஆற்றினர். மாமன்றக் கூட்டம் தொடங்கி யவுடன் மேயர் ந.தினேஷ்குமார்  மறைந்த ஆர்.நல்லகண்ணுவின் பணி களை முன்வைத்து இரங்கல் தீர் மானத்தை முன்மொழிந்தார். அனை வரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று  மௌன அஞ்சலி செலுத்தினர்.இதை யடுத்து காங்கிரஸ் சார்பில  செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், பாஜக  சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சி   சார்பில் ஆர்.மணிமேகலை, மதிமுக சார்பில் எஸ்.சாந்தாமணி, தமாகா சார்பில் செழியன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெனாசீர், திமுக மூன்றா வது மண்டலத் தலைவர் சி.கோவிந்த சாமி உள்ளிட்டோர் ஆர்.நல்லகண் ணுவை பற்றி புகழுரை ஆற்றினர். இதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற் றது.