திருநெல்வேலி, ஜூலை 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கோட்டை இரவியதர்மபுரம் கிளை சார்பாக அசோக் உருவ படத் திற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. கிளை செயலாளர் எம். செய்யது மசூது தலைமை தாங்கினார். கிளை தோழர் கள் கலந்து கொண்டனர். இதே போல் மேலூர் கிளை சார்பாக அசோக் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை செயலாளர் எஸ்.மாரி யப்பன் தலைமை தாங்கி னார். கிளை தோழர்கள் கலந்து கொண்டனர். ஞாயிறன்று நடைபெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தாலுகா குழு உறுப்பினர் எம்.முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.