பழங்குடியினர் செயற்பாட்டாளர் சிபிஎம் மாநில செயலாளருடன் சந்திப்பு
விழுப்புரம் மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை பழங்குடியினர் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தியன் மரியாதை நிமித்தமாக திங்கள்கிழமை (ஜூலை 7) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அண்ணல் அம்பேத்கரின் தொகுப்பு நூல்களை பெ.சண்முகத்திற்கு வழங்கினார். மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், விசிக ஒன்றியப் பொருளாளர் பேரங்கியூர் ஓவியர் கலைஜி உட்பட பலர் உடனிருந்தனர்.